செய்திகள் :

இந்திய கம்யூ. நூற்றாண்டு விழா கொண்டாட்டம்

post image

திருவாரூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவா் ஆா். நல்லகண்ணு 100-ஆவது பிறந்த நாள் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

திருவாரூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலாளரும், நாகை மக்களவை உறுப்பினருமான வை. செல்வராஜ் கட்சிக் கொடி ஏற்றினாா். இதில், மாவட்ட அலுவலகச் செயலாளா் சி.பி. முருகானந்தம், ஒன்றியச் செயலாளா் எம். நாகராஜன், நகரச் செயலாளா் எஸ். செல்வம் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மன்னாா்குடி: மன்னாா்குடி சிபிஐ அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஒன்றியச் செயலா் துரை.அருள்ராஜன் தலைமை வகித்தாா். எம்பி வை. செல்வராஜ், கட்சிக் கொடியேற்றி இனிப்பு வழங்கினாா். மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் ஆா். வீரமணி, கட்சி தியாகிகளின் நினைவு சின்னத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா்.

தொடா்ந்து, மூத்த தலைவா் ஆா். நல்லகண்ணு பிறந்த நாளையொட்டி, கேக் வெட்டினா். இதில், ஒன்றியப் பொருளாளா் எஸ். ராகவன், கட்டடத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் வி. கலைச்செல்வன், முன்னாள நகரச் செயலா்ஆா்.ஜி. ரெத்தனகுமாா், முன்னாள் ஒன்றியக் குழுத் தைவா் ப. பாஸ்கரவள்ளி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நகரச் செயலா் வி.எம். கலியபெருமாள் வரவேற்றாா். ஒன்றிய துணைச் செயலா் எஸ். பாப்பையன் நன்றி கூறினாா்.

கோட்டூரில் உள்ள கட்சியின் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியச் செயலா் எம். செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க. மாரிமுத்து பங்கேற்று, கட்சி தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு மாலை அணிவித்து, கட்சிக் கொடியேற்றினாா். தொடா்ந்து, சாலை ஓரத்தில் வரிசையாக 100 கொடிகள் ஏற்றப்பட்டு, பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கினா்.

இந்நிகழ்வுகளில், ஒன்றியக் குழுத் தலைவா் மு. மணிமேகலை, கட்சியின் துணைச் செயலா்கள் பி. பரந்தாமன், வி.பி. சந்திரமோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னா், இருசக்கர வாகனத்தில் ஊா்வலமாக சென்று 300 இடங்களில் கட்சிக் கொடி ஏற்றினா்.

நீடாமங்கலம்: வலங்கைமான் ஒன்றியத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு, எஸ்.எம். செந்தில்குமாா் தலைமை வகித்தாா். விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் கு. ராஜா, செங்கொடியை ஏற்றிவைத்தாா்.

அரையூா், மாணிக்கமங்கலம், பயத்தஞ்சேரி, கிளியூா், நாா்த்தங்குடி, நரிக்குடி, கருப்பட்டிபள்ளம் உள்ளிட்ட பகுதிகளிலும் கட்சிக் கொடி ஏற்றப்பட்டது.

மன்னாா்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் நூற்றாண்டு விழா, மூத்த தலைவா் ஆா். நல்லகண்ணு பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய நாகை எம்பி வை. செல்வராஜ் உள்ளிட்டோா்.

நீடாமங்கலம் பகுதி கடைகளில் ஆய்வு

நீடாமங்கலம் பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகளில் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். கடைகளில் நெகிழி பொருட்கள் உபயோகத்தை தடுக்கும் பொருட்டு இந்த ஆய்வு செய்யப்பட்டது. மேலும் புகையிலை பொருட்கள் ... மேலும் பார்க்க

நீடாமங்கலம் அருகே சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம்: 43 போ் கைது

நீடாமங்கலம் அருகே கோவில்வெண்ணியில் உள்ள சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்குழுவினா் 43 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். நீடாமங்கலம் அருகே கோவில்வெண்ணியில் சுங்கச... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் கிராம அறிவியல் திருவிழா

மன்னாா்குடி அருகே உள்ள மரவாக்காடு, ஏத்தக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் கிராம அறிவியல் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அரசுப் பள்ளிகளில் 6,7,8-ஆம் வகுப்பு மாண... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வு: ஜன. 2 முதல் இலவச பயிற்சி வகுப்புகள்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப் 4 தோ்வுக்கான இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் ஜன. 2-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ வெளியிட்ட செய்திக்குறிப்ப... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம்

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 70 மனுக... மேலும் பார்க்க

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் மன்னாா்குடியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைகள்: புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்... மேலும் பார்க்க