லீக்ஸ் கோப்பை தோல்விக்குப் பழிதீர்த்த இன்டர் மியாமி..! மெஸ்ஸி ஆட்ட நாயகன்!
இந்திய டெஸ்ட்: மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு! முன்னாள் கேப்டன் பிராத்வெயிட் நீக்கம்!
இந்தியாவில் நடைபெறும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்தத் தொடர் வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி துவங்கி 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டு போட்டிகளும் அகமதாபாத் மற்றும் தில்லியில் நடைபெறுகிறது. இந்தத் தொடருக்கான 15 பேர் கொண்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கார்லஸ் பிராத்வெயிட் நீக்கப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக முன்னாள் ஜாம்பவான் வீரர் சிவநரைன் சந்தர்பாலின் மகன் டேகனரைன் சந்தர்பால் மற்றும் அலிக் அதனேஸ் இருவருக்கும் மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முன்னாள் கேப்டனான கார்லஸ் பிராத்வெயிட் 4 இன்னிங்ஸ்கள் முறையே 4, 4, 0 மற்றும் 7 ரன்கள் எடுத்திருந்தார். இதனால், அவர் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் மூன்றாவது போட்டியில் வெறும் 27 ரன்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆல்-அவுட் ஆனது. இதனால், அந்த அணியில் இடம்பெற்ற பிராத்வைட்டை தவிர்த்து கீசி கார்டி, ஜோஹன் லேன் மற்றும் மிகைல் லூயிஸ் ஆகியோரும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அணி விவரம்
ரோஸ்டன் சேஸ் (கேப்டன்), ஜோமல் வாரிகன் (துணை கேப்டன்), கெவ்லான் ஆண்டர்சன், அலிக் அதனேஸ், ஜான் கேம்பல், டேகனரைன் சந்தர்பால், ஜஸ்டின் கிரீவ்ஸ், ஷாய் ஹோப், டெவின் இம்லாக், அல்சாரி ஜோசப், ஷமர் ஜோசப், பிரண்டன் கிங், ஆண்டர்சன் பிலிப், காரி பியர், ஜேடன் சீல்ஸ்