செய்திகள் :

இந்திய தேர்தல் முறையில் தவறு இருக்கிறது: ராகுல் காந்தி

post image

தேர்தல் ஆணையம் சமரசம் செய்துகொண்டுள்ளது மிகவும் தெளிவாகத் தெரிகிறது என அமெரிக்காவில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மகாராஷ்டிர மாநிலத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. அப்போது வாக்குபதிவில் குளறுபடி நடந்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. எனினும் வாக்குப்பதிவில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என தேர்தல் ஆணையம் கூறியது.

இந்நிலையில் இதுதொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவில் பேசியுள்ளார்.

அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி, பாஸ்டன் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசியபோது,

"மகாராஷ்டிரத்தில் உள்ள மொத்த மக்கள்தொகையைவிட தேர்தலில் அதிக மக்கள் வாக்களித்துள்ளனர். இதுதான் உண்மை. வாக்குப்பதிவு நடந்த அன்று மாலை 5.30 மணிக்கும் 7.30 மணிக்கும் தேர்தல் ஆணையம் அறிக்கை அளித்தது. இந்த 2 மணி நேரத்தில் 65 லட்சம் வாக்காளர்கள் வாக்குகளை செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியது. இது சாத்தியமே இல்லாதது. ஒரு வாக்காளர், வாக்களிக்க சுமார் 3 நிமிடங்கள் ஆகும். இதனை நீங்கள் கணக்கிட்டால் மறுநாள் அதிகாலை 2 மணி வரை வாக்காளர்கள் வரிசையில் நின்றிருப்பார்கள் என்று அர்த்தம். நாங்கள் இதுதொடர்பான விடியோ பதிவைக் கேட்டதற்கு அவர்கள் மறுத்தது மட்டுமின்றி சட்டத்தையும் மாற்றினர்.

தேர்தல் ஆணையம் சமரசம் செய்துகொண்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. மேலும் இந்த அமைப்பில் தவறு இருக்கிறது. நான் இதை பலமுறை கூறியுள்ளேன்" என்று பேசியுள்ளார்.

அமெரிக்க துணை அதிபரை வரவேற்ற பிரதமர் மோடி!

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரின் குடும்பத்தாரை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப். 21) சந்தித்தார். தில்லியில் உள்ள பிரதமர் இல்லத்துக்கு மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்ற ஜே.டி. வான்ஸை ... மேலும் பார்க்க

உயர்தர போலி ரூ.500 நோட்டு.. மத்திய உள்விவகாரத் துறை எச்சரிக்கை!

மிக நவீனமான உயர்தர போலி ரூ.500 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டிருப்பதாகவும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய உள்விவகாரத் துறை எச்சரித்துள்ளது.அச்சடிக்கப்பட்டிருக்கும் விதம், போலி ரூபாய் நோட... மேலும் பார்க்க

இரக்கம், எளிமையின் அடையாளமாகத் திகழ்ந்தவர் போப் பிரான்சிஸ்! - பிரதமர் மோடி இரங்கல்

போப் பிரான்சிஸ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுரு போப் பிரான்சிஸ்(88) இன்று(ஏப். 21) அதிகாலை உயிரிழந்ததாக வாடிகன் தெரிவித்துள்ளது. அவருக்க... மேலும் பார்க்க

முன்னாள் டிஜிபி கொலை: விசாரணைக்குப் பிறகே உண்மை தெரியவரும்- கர்நாடக அமைச்சர்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் முன்னாள் காவல்துறை டிஜிபி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் உரிய விசாரணை நடத்திய பிறகே, உண்மை என்னவென்று தெரியவரும் என கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா தெரிவித்துள்ளார... மேலும் பார்க்க

இந்திய பாரம்பரிய உடையில் அமெரிக்க துணை அதிபரின் குழந்தைகள்!

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸுடன் வருகைதந்திருக்கும் அவரது மூன்று குழந்தைகளும் பாரம்பரிய உடை அணிந்துள்ளனர்.நான்கு நாள்கள் பயணமாக இந்தியா வருகைதந்துள்ள அமெரிக்க து... மேலும் பார்க்க

மகாராஷ்டிரப் பள்ளிகளில் ஹிந்தி சேர்ப்பு: மாநில மொழி ஆலோசனைக் குழு எதிர்ப்பு!

மகாராஷ்டிரத்தில் பள்ளிகளில் 3 ஆவது மொழியாக ஹிந்தி சேர்க்கப்பட்டுள்ளதற்கு அந்த மாநில மொழி ஆலோசனைக் குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரத்தில் தேசிய கல்விக் கொள்கை 2020-இன் கீழ், மராத்தி மற்றும் ஆ... மேலும் பார்க்க