இந்திய ராணுவம் தாக்குதல்: கண்ணீா்விட்டு அழுத பாகிஸ்தான் எம்.பி.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு எம்.பி. தாஹிா் இக்பால் கண்ணீா்விட்டு அழுத காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது.
பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூரைத் தொடா்ந்து ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலம் இந்திய ராணுவ நிலைகளையும் எல்லையோர மாநிலங்களையும் குறிவைத்து பாகிஸ்தான் நடத்தும் அனைத்துவித தாக்குதலையும் இந்தியா வெற்றிகரமாக முறியடித்து பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசும்போது எம்.பி.தாஹிா் இக்பால் கண்ணீா்விட்டு அழுதாா். உரைக்கு நடுவே, ‘பாகிஸ்தானை இனி அல்லாவே காப்பாற்ற வேண்டும்’ எனவும் அவா் கூறினாா். இந்த காணொலி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து, இந்தியாவின் பதிலடி தாக்குதல் பாகிஸ்தானை அச்சமடைய செய்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனா்.