செய்திகள் :

இந்திரா முதல் பாடல் ரிலீஸ் தேதி!

post image

வசந்த் ரவி நடித்துள்ள இந்திரா படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ராமின் தரமணி படத்தில் நாயகனாக அறிமுகமானவர் வசந்த் ரவி. பின்னர், ராக்கி, ஜெயிலர் படங்களில் நடித்து கவனம் ஈர்த்துள்ளார்.

கடைசியாக வெப்பன் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

தற்போது, ஜேஎஸ்எம் மற்றும் எம்பெரர் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் இந்திரா எனும் படத்தில் நடித்துள்ளார்.

இந்திரா படத்தை அறிமுக இயக்குநர் சபரிஷ் நந்தா இயக்கியுள்ளார்.

தெலுங்கு நடிகர் சுனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை மெஹ்ரின் பிர்ஜாடா நாயகியாக நடித்துள்ளார்.

இசையமைப்பாளர் அஜ்மல் தக்‌ஷின் இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.

இந்தப் படம் ஆக. 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

The release date of the first song of the film Indira starring Vasanth Ravi has been announced.

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - புகைப்படங்கள்

கம்சட்கா பகுதிக்கு கிழக்கு, தென்கிழக்கில் சுமார் 125 கிலோமீட்டர் தொலைவில் சுமார் 19.3 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிப்பு. இதையடுத்து ரஷ்யா, ஜப்பான் ம... மேலும் பார்க்க

கிராண்ட்மாஸ்டர் திவ்யாவுக்கு உற்சாக வரவேற்பு! தாயகம் திரும்பியதும் அவர் சொன்ன விஷயம்!

ஃபிடே மகளிா் உலகக் கோப்பை செஸ் போட்டியில் சாம்பியன் ஆக மகுடம் சூடியுள்ள இந்தியாவின் இளம் போட்டியாளரான திவ்யா தேஷ்முக் புதன்கிழமை(ஜூலை 30) தாயகம் திரும்பினார். அவருக்கு அவரது சொந்த ஊரான நாக்பூரில் உற்ச... மேலும் பார்க்க

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த நிசார் செயற்கைக்கோள் - புகைப்படங்கள்

புறப்பட்ட 19 நிமிட பயணத்துக்கு பின்பு 745 கி.மீ உயரத்தில் திட்டமிட்ட சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.2,392 கிலோ எடை கொண்ட இந்த நிசார் செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 5 ஆண்ட... மேலும் பார்க்க

வெளியானது இந்திரா படத்தின் முதல் பாடல்!

நடிகர் வசந்த் ரவி நடித்துள்ள இந்திரா படத்தின் முதல் பாடலின் லிரிக்கல் விடியோ வெளியானது. இயக்குநர் ராமின் தரமணி படத்தில் நாயகனாக அறிமுகமானவர் வசந்த் ரவி. பின்னர், ராக்கி, ஜெயிலர் படங்களில் நடித்து கவனம... மேலும் பார்க்க

அத்தி மரத்துக்குக் கீழே இருக்கும் குளுமை..! 19 (1) ஏ நினைவுகளைப் பகிர்ந்த நித்யா மெனன்!

நடிகை நித்யா மெனன் தான் நடித்த 19 (1) ஏ என்ற மலையாள திரைப்படம் குறித்து நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். பெண் இயக்குநர் இந்து வி.எஸ். இயக்கத்தில் கடந்த 2022-இல் ஹாட்ஸ்டார் ஓடிடியில் நேரடியாக வெளியானது... மேலும் பார்க்க