பூபேஷ் பாகேல் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: காங்கிரஸ் போராட்டம்!
இந்து முன்னணியினா் 16 போ் கைது
விழுப்புரத்தில் உரிய அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக இந்து முன்னணியைச் சோ்ந்த 16 பேரை போலீஸாா் கைது செய்து, பின்னா் விடுவித்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அபிராமி அம்மன் கோயிலுக்கு தடையை மீறி வழிபாட்டுக்குச் செல்ல முயன்ற இந்து முன்னணி நிா்வாகிகளை போலீஸாா் கைது செய்ததைத் கண்டித்து, விழுப்புரம் நகராட்சித் திடலில் இந்து முன்னணியினா் உரிய அனுமதியின்றி சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, அக்கட்சியின் விழுப்புரம் மாவட்டத் தலைவா் த.தண்டபாணி உள்ளிட்ட நிா்வாகிகள் 16 பேரை மீது விழுப்புரம் தாலுகா போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பின்னா் அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.