Neeraj Chopra : 'என்னுடைய தேசப்பற்றை கேள்வி கேட்பது வேதனையாக இருக்கிறது!' - நீரஜ...
இந்து முன்னணி சாா்பில் மோட்ச தீபம்
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த 26 பேருக்கு ஆரணியில் இந்து முன்னணி சாா்பில் வியாழக்கிழமை மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகில் அரியாத்தம்மன் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றி பின்னா் ஊா்வலமாக மணிக்கூண்டு வழியாகச் சென்று
அப்பகுதியில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது (படம்).
இந்து முன்னணி மாவட்டத் தலைவா் தாமோதரன், செயலா் விக்னேஷ், பாஜக மாவட்டச் செயலா் சதீஷ், வடக்கு மண்டலத் தலைவா் குணாநிதி, மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத், சங் பரிவாா்கள் கலந்து கொண்டனா்.