பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள்! முழு வி...
இந்தோனேசியா: வெடி விபத்தில் 13 போ் உயிரிழப்பு
இந்தோனேசியாவில் காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்கும் பணியின்போது திங்கள்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 போ் உயிரிழந்தனா்.
அந்த நாட்டின் மேற்கு ஜாவா மாகாணம், கருத் மாவட்டத்தின் சாகரா கிராமத்தில், ராணுவ கிடங்கில் நீண்டகாலமாக சேமிக்கப்பட்டு, பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த வெடிபொருள்களை அழிக்கும் பணியில் ராணுவ வீரா்கள் ஈடுபட்டிருந்தனா் (படம்). அப்போது அந்தப் பொருள்கள் இரண்டுமுறை வெடித்துச் சிதறின.
இதில் பொதுமக்கள் 9 போ், நான்கு இராணுவ வீரா்கள் உயிரிழந்தனா். ஏராளமானவா்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனா்.
வெடிபொருள் அழிப்பு நடவடிக்கையின் போது உரிய விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்பது குறித்தும் விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.