செய்திகள் :

``இந்த 12 நாட்டு மக்கள் அமெரிக்காவிற்குள் இனி நுழைய முடியாது..'' - ட்ரம்ப் அறிவிப்பு; என்ன காரணம்?

post image

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அப்படி நேற்று, உலகில் உள்ள குறிப்பிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவித்துள்ளார்.

காரணம் என்ன?

இதுகுறித்து கூறப்படும் வெள்ளை மாளிகையின் அறிக்கையில் கூறப்படுவதாவது,

"மக்களின் பின்புலத்தைச் சரியாக ஆராய முடியாத, பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ள நாடுகளைச் சேர்ந்த மக்களை அமெரிக்காவிற்குள் வர அனுமதிக்க முடியாது".

ட்ரம்ப
ட்ரம்ப்

அந்த 12 நாடுகள் என்னென்ன?

ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், எரித்திரியா, ஹைட்டி, ஈரான், சோமாலியா, சூடான், ஏமன், காங்கோ குடியரசு, ஈக்விட்டோரியா கினியா, லிபியா ஆகிய 12 நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவிற்குள் நுழைய முடியாது.

7 நாடுகள்!

இன்னும் 7 நாடுகளின் மக்கள் தீவிர கண்காணிப்பிற்குப் பிறகு, பகுதியாக அனுமதிக்கப்படுவார்கள்.

அந்த நாடுகள்… புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா.

பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குள் தீவிரவாதம் மற்றும் போதைப் பொருட்களைக் கடத்துகிறார்கள். இதனால், அமெரிக்கர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது ட்ரம்பின் குற்றச்சாட்டு.

இந்தக் குற்றச்சாட்டின் ஒரு பகுதியாகத் தான் ஆவணம் செய்யப்படாத வெளிநாட்டு மக்களை ட்ரம்ப் வெளியேற்றி வருகிறார்.

தற்போது, அடுத்ததாக, சில நாட்டு மக்களை அமெரிக்காவிற்குள் உள்நுழைவதைத் தடுக்கிறார் ட்ரம்ப்.

காயத்தால் ரத்தம் வந்தால் வாயால் உறிஞ்சுவது சரியா.. என்ன செய்ய வேண்டும்? - விளக்கும் மருத்துவர்

சிறுவயதில் காயம் ஏற்பட்டால் கசியும் ரத்தத்ததை உடனே வாயில் வைப்போம். வளர்ந்த பிறகும்கூட பலருக்கு இந்தப் பழக்கம் இருக்கிறது. இது சரியா; இதனால் உடலில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா என்பதை விளக்குகிறார், ச... மேலும் பார்க்க

Doctor Vikatan: அதிகம் சாப்பிட முடியாத நிலை, 'வயிறு சுருங்கிடுச்சு..' என்பது சாத்தியமா?

Doctor Vikatan:குறைவாக சாப்பிட்டுப் பழகியவர்களுக்கு ஒரு கட்டத்தில் அதுவே பழகிவிடுகிறது. ஆசைப்பட்டாலும் அதற்கு மேல் அதிகமாக சாப்பிட முடிவதில்லை. 'வயிறு சுருங்கிடுச்சு...' என்று சொல்கிறோம். வயிறு சுருங்... மேலும் பார்க்க

Bangladesh: டிசம்பருக்குள் தேர்தல்! ராஜினாமா செய்யும் யூனுஸ்; ஹசீனாவின் எதிர்காலம்..? | In Depth

ரோட்டில் நின்றுகொண்டிருந்த பஸ்களும், கார்களும் கரும் புகைகளைக் கிளப்பி எரிந்துகொண்டிருக்க, கீழே சிதறிக் கிடக்கும் கற்களில் ஆங்காங்கே ரத்தம் தோய்ந்து… காய்ந்திருக்கின்றன. கற்களுடன் ஆங்காங்கே கட்டைகளும்... மேலும் பார்க்க

``2027-ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு; பாஜக சதி, பழனிசாமி துணை.." - ஸ்டாலின் குற்றச்சாட்டு

மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027 குறித்த தகவலை நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. 2027-ம் ஆண்டு வரை மக்கள்தொகை கணக்கெடுப்பை தள்ளிப்போடுவதற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து... மேலும் பார்க்க

Varicose: கால் நரம்புகள் சுருண்டு வெரிகோஸ் வெயின்ஸ் பிரச்னை; இயற்கை மருத்துவத்தில் தீர்வுஉண்டா?

’’கர்ப்பிணிப்பெண்கள், உடல் பருமன் உள்ளவர்கள் மற்றும் ஒரே இடத்தில் நின்று வேலை செய்பவர்களுக்கு வெரிகோஸ் வெயின்ஸ் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். காலின் தோலுக்கு அடியில் ரத்தம் மேலும் கீழும் செல்ல முடியாம... மேலும் பார்க்க

``ஒரு மொழியை சிறுமைப்படுத்தி, ஒரு மொழியை உயர்த்திப் பேசுவது தேவையில்லாதது!'' - நயினார் நாகேந்திரன்

புதுக்கோட்டையில் பா.ஜ.க மாவட்ட துணைத் தலைவர் முருகானந்தத்தின் இல்ல புதுமனை புகுவிழா நிகழ்ச்சி வருகின்ற எட்டாம் தேதி நடைபெற உள்ளது.இன்று அவரது இல்லத்திற்கு பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வந்தி... மேலும் பார்க்க