செய்திகள் :

இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ?: அண்ணாமலை கேள்வி

post image

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்த பெண்ணுக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையால் அந்த பெண்ணின் கூச்சல் கேட்டு நல்லவர் ஒருவர் காவல்துறையை அழைத்ததால், அந்த பெண் தப்பிய நிலையில், நம் சகோதரிகளுக்கு பாதுகாப்பான சூழலை அதிகாரிகள் உறுதி செய்வதற்கு முன்பு இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ..? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டிருப்பதாவது:

கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திற்கு வெளியே 18 வயது இளம்பெண் ஒரு ஆட்டோவில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.

உதவி கேட்டு சத்தமிட்ட அந்த இளம்பெண்ணின் அலறல் சப்தம் கேட்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்த அந்த ஒரு நல்ல மனிதரால் அந்த பெண் காப்பற்றப்பட்டார்.

தமிழ்நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை என்பது சாதாரணமாகிவிட்டது. போதைப் பொருள் எளிதில் கிடைக்கூடிய பொருளாக மாறிவிட்டது.

கும்பமேளா மரணங்களை பாஜக மறைத்துவிட்டது: திமுக குற்றச்சாட்டு

இருப்பினும், தமிழ்நாட்டில் போதைப் பொருள் தடுப்பு வழக்கில் கடந்த 2021 இல் மட்டும் 9,632 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில், 2022 மற்றும் 2024-க்கு இடையில், கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1122 மட்டுமே.

தமிழ்நாட்டில் கஞ்சா மற்றும் மெத்தம்பேட்டமைன் போன்ற போதைப் பொருள்கள் விற்பனை அதிகரித்து வருகிறது, ஆனால் கைதுகள் மட்டும் குறைந்து வருவது எப்படி?

குறைவான அளவில் போதைப் பொருள் தொடர்பான கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதன் மூலம், போதைப் பொருள் கடத்தல்காரர்கள் சுதந்திரமாக திரிவதற்காகவே தமிழக அரசு வேண்டுமென்றே மெத்தனமாகிவிட்டதா? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் போதைப் பொருள்கள் விற்பனை அதிகரித்துள்ளதால் தான் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், நம் சகோதரிகளுக்கு பாதுகாப்பான சூழலை அதிகாரிகள் உறுதி செய்வதற்கு முன்பு இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ??? என அவர் கூறியுள்ளார்.

ஓடிடியில் கேம் சேஞ்சர்: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைப் பார்க்கலாம்.ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம் சரண் நடிப்பில் வெளியான கேம் சேஞ்சர் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்த... மேலும் பார்க்க

குடும்ப அட்டையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமா? வெளியான அறிவிப்பு!

குடும்ப அட்டையில் திருத்தம் மேற்கொள்வதற்காக சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் வருகின்ற பிப். 8 ஆம் தேதி பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது.பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்க... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கில் வாக்குப்பதிவு நிறைவு!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்துள்ளது. மேலும் பார்க்க

பிப். 26 முதல் அரசுப் பேருந்துகள் இயங்காது: அண்ணா தொழிற்சங்கம்

வரும் பிப். 26 முதல் அரசுப் பேருந்துகள் இயங்காது என்று அண்ணா தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.சென்னையில் அண்ணா தொழிற்சங்கத்தின் தலைமையில் கீழ் செயல்படும் கூட்டமைப்பு சங்களின் ஆலோசனைக் கூட்டம் கடந்த 2 நாள்... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கில் 64.02% வாக்குப்பதிவு!

இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 64.02% வாக்குகள் பதிவாகியுள்ளன. ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவையடுத்து இத்தொகுதிக்கு... மேலும் பார்க்க

தமிழகத்தில் 10 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்! - அமைச்சர் தகவல்

தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் அளவு 10 லட்சம் மெட்ரிக் டன்னைத் தாண்டியதாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற... மேலும் பார்க்க