காஸாவில் உயிரிழந்தவா்களில் 70% போ் பெண்கள், குழந்தைகள்: ஐ.நா.
இன்னும் பல வெற்றிகள் காத்திருக்கு... முகமது ரிஸ்வானை பாராட்டிய முன்னாள் கேப்டன்!
முகமது ரிஸ்வானை பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷகித் அஃப்ரிடி பாராட்டியுள்ளார்.
பாகிஸ்தானின் டி20 மற்றும் ஒருநாள் அணிகளின் புதிய கேப்டனாக முகமது ரிஸ்வான் அண்மையில் நியமிக்கப்பட்டார். முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் முதலில் நடைபெற்று வருகிறது.
முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி போராடி தோல்வியடைந்த நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இதையும் படிக்க: ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இந்தியா தயாரா? இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்கள் என்ன?
முகமது ரிஸ்வானுக்கு பாராட்டு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் அபார வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டன் முகமது ரிஸ்வானுக்கு பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் ஷகித் அஃப்ரிடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: கேப்டன் அணிக்கு ஊக்கம் அளிக்கும்போது, அணி சிறப்பாக விளையாடுகிறது. முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, பாகிஸ்தான் அணி மிக வலுவாக திரும்பி வந்துள்ளது. இந்த வெற்றி அடுத்து வரவிருக்கும் ஒருநாள் போட்டிகளுக்கு பாகிஸ்தான் அணிக்கு உத்வேகம் அளிக்கும்.
முகமது ரிஸ்வான், ஹாரிஸ், ஷாகீன், சயீம் மற்றும் அப்துல்லா ஆகியோர் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். உங்களை நம்புங்கள். உங்களுக்கு மேலும் பல வெற்றிகள் காத்திருக்கின்றன எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: ஜேம்ஸ் ஆண்டர்சன் ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்படுவாரா? முன்னாள் கேப்டன் ஆர்வம்
தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (நவம்பர் 10) பெர்த்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.