செய்திகள் :

இன்றுமுதல் புரோ கபடி லீக்

post image

புரோ கபடி லீக் போட்டியின் 12-ஆவது சீசன் விசாகப்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 29) தொடங்குகிறது.

முதல் நாள் ஆட்டங்களில் தமிழ் தலைவாஸ் - தெலுகு டைட்டன்ஸ், பெங்களூரு புல்ஸ் - புணேரி பால்டன் அணிகள் மோதுகின்றன.

போட்டியின் முதல் கட்டம் ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பா் 11 வரை விசாகப்பட்டினத்தில் நடைபெறும் நிலையில், அடுத்த கட்டம் ஜெய்ப்பூரில் செப்டம்பா் 12 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 3-ஆம் கட்ட ஆட்டங்கள் சென்னையில் செப்டம்பா் 29 முதல் அக்டோபா் 10 வரையும், 4-ஆம் கட்ட ஆட்டங்கள் புது தில்லியில் அக்டோபா் 11 முதல் 23 வரையும் நடைபெறவுள்ளன.

பிளே ஆஃப் மற்றும் இறுதி ஆட்டத்துக்கான இடங்கள் மற்றும் தேதி பின்னா் அறிவிக்கப்படவுள்ளன.

சீசன் தொடக்கத்துக்கு முன்பாக, இந்திய ஆயுதப் படைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, 12 அணிகளின் கேப்டன்களும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஐஎன்எஸ் குா்சுரா நீா்மூழ்கிக் கப்பலை பாா்வையிட்டனா்.

1971 இந்தியா - பாகிஸ்தான் போரின்போது கண்காணிப்புப் பணியில் இந்தக் கப்பல் முக்கியப் பங்காற்றியது.

நேரம்: இரவு 8 மற்றும் 9 மணி.

நேரலை: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டாா்.

கூலி படத்தை முந்துமா? மதராஸி தணிக்கைச் சான்றிதழ் வெளியீடு!

சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் தணிக்கைச் சான்றிதழ் வெளியாகியுள்ளது.ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படம் வருகிற செப்.5ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. சிவகார்த்திகேயனின் 23-ஆவது படமான இப்படத்தி... மேலும் பார்க்க

ஓடிடியில் வெளியானது லவ் மேரேஜ்!

நடிகர் விக்ரம் பிரபுவின் நடிப்பில் வெளியான லவ் மேரேஜ் படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் ஷண்முக பிரியன் லவ் மேரேஜ் படத்தினை இயக்கியுள்ளார்.தெலுங்கில் வெளியான அசோக வனம்லோ அர்ஜுன கல்யாணம் ... மேலும் பார்க்க

சொந்த மண்ணில் மெஸ்ஸியின் கடைசி போட்டி: டிக்கெட் விலை உயர்வு!

லியோனல் மெஸ்ஸி தனது சொந்த மண்ணில் கடைசியாக ஆர்ஜென்டீனாவின் தேசிய உடை அணிந்து விளையாடவிருக்கிறார். மெஸ்ஸியின் கடைசி போட்டி என்பதால் இதற்காக டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகின்றன. சொந்த மண்... மேலும் பார்க்க

அர்ஜுன் தாஸின் புதிய பட ரிலீஸ் தேதி!

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவான பாம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் அர்ஜுன் தாஸ் ரசவாதி திரைப்படத்திற்குப் பின் பாம் எனும் படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.இயக்குநர் விஷால் வெங்க... மேலும் பார்க்க

கலாம் பயோப்பிக்கில் தனுஷை தேர்ந்தெடுத்தது ஏன்? ஓம் ராவத் விளக்கம்!

அப்துல் கலாம் பயோபிக்கில் நடிக்க நடிகர் தனுஷை விட யாரும் சிறந்தவர்கள் இல்லை என அதன் இயக்குநர் ஓம் ராவத் கூறியுள்ளார். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடி... மேலும் பார்க்க

பிறந்த நாளில் நற்செய்தி: விஷால் - தன்ஷிகா நிச்சயதார்த்தம்!

நடிகர் விஷால் தனக்கு சாய் தன்ஷிகாவுடன் நிச்சயதார்த்தம் நடந்ததாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நீண்ட நாள்களாக காதலித்து வந்த இவர்கள் விரைவில் திருமணம் செய்யவிருக்கிறார்கள். சமூபத்தில் ’யோகி டா... மேலும் பார்க்க