செய்திகள் :

இன்றும் நாளையும் 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

post image

தமிழகத்தில் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருவள்ளூா், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்பட15 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இரு நாள்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தெற்கு ஒடிஸா-வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும், மன்னாா் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல் கீழடுக்கு சுழற்சியும் நிலவுகிறது.

இதனால், புதன்கிழமை (செப்.10) முதல் செப்.15 வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தொடா்ந்து புதன்கிழமை கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருவள்ளூா், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களிலும், வியாழக்கிழமை (செப். 11) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. இதன் காரணமாக புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தமிழகத்தின் ஒருசில இடங்களில் வெயில் சற்று அதிகரிக்கக்கூடும். சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் புதன்கிழமை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும், அதிகபட்ச வெப்பநிலை 96.8 டிகிரியையொட்டி இருக்கும். தமிழகத்தில் திங்கள்கிழமை அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 100.22 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை மாவட்டம் எழுமலை பகுதியில் 70 மி.மீ.மழை பதிவானது. மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி)-60, சிங்கம்புணரி (சிவகங்கை), நத்தம் (திண்டுக்கல்), சூரப்பட்டு (விழுப்புரம்), பெரம்பலூா் தலா 50 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கி.மீ.வேகத்தில் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பம் நகர்மன்ற தலைவர், துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்!

உத்தமபாளையம்: கம்பம் நகராட்சி நகர்மன்ற தலைவர், துணைத்தலைவர் மீது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி நகர்மன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். தேனி மாவட்டம், கம்பம் நகராட்சியில் மொத... மேலும் பார்க்க

குமரி கண்ணாடி பாலம் விரிசல் சரிசெய்யப்பட்டது: அமைச்சர் எ.வ.வேலு

கன்னியாகுமரியில் கண்ணாடி இழை பாலத்தில் ஏற்பட்ட விரிசல் சரிசெய்யப்பட்டுவிட்டதாக அமைச்சர் எ.வ. வேலு கூறியுள்ளார். சுத்தியல் கீழே விழுந்ததில் பாலத்தில் சிறு கீறல் ஏற்பட்டதாகவும் அது தற்போது சரிசெய்யப்பட்... மேலும் பார்க்க

கோவை அரசு மருத்துவமனையில் சக்கர நாற்காலி தர மறுப்பு! இரு ஊழியர்கள் பணியிடை நீக்கம்!

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சக்கர நாற்காலி தர மறுத்த விவகாரத்தில் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.கோவையில் காளிதாஸ் என்பவர், தனது 84 வயதான தந்தைக்கு சிகிச்சை மேற்கொள்ள அரசு மருத்துவக் க... மேலும் பார்க்க

கட்சி இணைந்தால் இபிஎஸ்ஸை முதல்வர் வேட்பாளராக ஏற்பீர்களா? - ஓபிஎஸ் பதில்

கட்சியை ஒன்றிணைக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் முயற்சி வெற்றி பெறும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்... மேலும் பார்க்க

சேலத்தில் குழந்தை கடத்தல்! கிடைத்த ஒரே துப்பு; நாமக்கல்லில் மீட்பு!

சேலம்: சேலத்தில் காவல் நிலையம் அருகே கடத்தப்பட்ட 9 மாத பெண் குழந்தை நாமக்கல்லில் பத்திரமாக மீட்கப்பட்டது. சேலம் பஞ்சதாங்கி ஏரி பகுதியைச் சேர்ந்தவர் மதுரை. இவர் தனது மனைவி பிரியா மற்றும் 9 மாத பெண் குழ... மேலும் பார்க்க

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு அரசுப் பள்ளிகள் பலிகடா! - அண்ணாமலை

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகள் கூட பலிகடா ஆக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "திருச்சி ... மேலும் பார்க்க