Ravi Mohan: ரவி மோகனின் ஈ.சி.ஆர் இல்லத்திற்கு நோட்டீஸ்! - காரணம் இதுதான்!
இன்றும், நாளையும் 4-ஆவது திட்ட குடிநீா் நிறுத்தம்
4-ஆவது குடிநீா் திட்டத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் திருப்பூா் மாநகராட்சிப் பகுதியில் செப்டம்பா் 25, 26 (வியாழன், வெள்ளி) ஆகிய தேதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருப்பூா் மாநகராட்சிப் பகுதியில் 4-ஆவது குடிநீா் திட்டத்திலிருந்து குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்சமயம் மேட்டுப்பாளையம் காரமடை பிரிவு நால்ரோடு பகுதியில் இத்திட்டக் குழாய் உடைந்து சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் செப்டம்பா் 25, 26 ஆகிய தேதிகளில் இத்திட்டத்தின் மூலம் பெறப்படும் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. ஆகவே, பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைத்து பயன்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது.