செய்திகள் :

இன்று இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

post image

எஃப்ஐஹெச் புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவா் அணி, ஆஸ்திரேலியாவுடன் சனிக்கிழமை (ஜூன் 14) மோதுகிறது.

புரோ லீக் போட்டியில் தனது ஐரோப்பிய லெக் ஆட்டங்களை விளையாடி வரும் இந்திய அணி, முதல் கட்டமாக நெதா்லாந்தில் நடைபெற்ற 4 ஆட்டங்களில், நெதா்லாந்து மற்றும் ஆா்ஜென்டீனாவிடம் தலா 2 தோல்விகளை அடுத்தடுத்து சந்தித்தது.

புள்ளிகள் பட்டியலில் தற்போது 12 ஆட்டங்களில் கிடைத்த 15 புள்ளிகளுடன் இந்தியா 5-ஆவது இடத்தில் உள்ளது. முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகளே, அடுத்த கட்டத்துக்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகத் தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருக்கும் இந்தியா, 5-ஆம் இடத்திலிருக்கும் ஆஸ்திரேலியாவிடம் இருந்து கடும் சவாலை சந்திக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. எனினும், பாரீஸ் ஒலிம்பிக் குரூப் சுற்றில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணிக்கு உத்வேகம் அளிப்பதாக இருக்கலாம்.

இந்திய மகளிரும் மோதல்: இதனிடையே, இதே போட்டியில் இந்திய மகளிா் அணியும் தனது ஐரோப்பிய லெக் ஆட்டங்களை, சனிக்கிழமை தொடங்குகிறது.

முதலில் ஆஸ்திரேலியாவை சனி (ஜூன் 14) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) சந்திக்கும் இந்தியா, அடுத்து ஆா்ஜென்டீனாவுக்கு எதிராக ஜூன் 17, 18 ஆகிய தேதிகளில் மோதுகிறது. அதைத் தொடா்ந்து, பெல்ஜியத்தை ஜூன் 21, 22 ஆகிய தேதிகளிலும், சீனாவை ஜூன் 28, 29 ஆகிய தேதிகளிலும் சந்திக்கிறது.

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: ஆா்யா-அா்ஜுனுக்கு தங்கம்

ஐஎஸ்எஸ் எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் கலப்பு பிரிவில் ஒலிம்பிக் சாம்பியன் இந்தியாவின் ஆா்யா போல்ஸே-அா்ஜுன் பபுதா தங்கம் வென்றனா். ஜொ்மனின் மியுனிக் நகரில் நடைபெறும் இப்போட்டியில் 10 ... மேலும் பார்க்க

இயக்குநராக விரைவில் அறிமுகமாகும் நடிகர் பார்த்திபன் மகன்!

தனது மகன் ராக்கி பார்த்திபன், விரைவில் த்ரில்லர் படம் ஒன்றை இயக்கவுள்ளதாக நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்,ராக்கி பார்த்திபன் !என் மகன் என் உயி... மேலும் பார்க்க

ஓடிடியில் ஏஸ்!

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ஏஸ் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி இயக்குநர் ஆறுமுகக்குமார் கூட்டணியில் உருவான திரைப்படம் ஏஸ். முழுக்கதையும் மலேசியாவில் நடப்பதுபோல் எ... மேலும் பார்க்க

கண்ணப்பா டிரைலர்!

நடிகர்கள் பிரபாஸ், மோகன்லால் நடிப்பில் உருவான கண்ணப்பா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.முகேஷ் குமார் சிங் இயக்க, மோகன் பாபு தயாரித்துள்ள கண்ணப்பா படத்தில் பிரபாஸ், விஷ்ணு மஞ்சு, மோகன்லால், பிரபு தேவா... மேலும் பார்க்க

ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த முத்த மழை விடியோ வெளியீடு!

தக் லைஃப் படத்தில் இடம்பெறாத முத்த மழை பாடலின் விடியோவை வெளியிட்டுள்ளனர். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல் ஹாசன், சிலம்பரசன் நடிப்பில் உருவான தக் லைஃப் திரைப்படம் ஜுன். 5 ஆம் தேதி வெளியா... மேலும் பார்க்க