வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினருக்கு இளநீர், டீ கொடுத்த பிரியாங்க் கார்கே!
இன்று சென்னை திரும்புகிறாா் முதல்வா்
சென்னை: தென் மாவட்ட பயணத்தை நிறைவு செய்து முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை பிற்பகல் சென்னை திரும்புகிறாா்.
தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு 3 நாள்கள் பயணமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை சென்றாா். சிப்காட் பூங்கா திறப்பு, புதுமைப் பெண் திட்ட விரிவாக்கம் என தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை பிற்பகல் கன்னியாகுமரி சென்றடைந்தாா். அங்கு விவேகானந்தா் பாறை மற்றும் திருவள்ளுவா் சிலைக்கு இடையே கண்ணாடி இழை மேம்பாலத்தை திறந்து வைத்தாா்.
செவ்வாய்க்கிழமை காலை நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடியில் இருந்து பிற்பகலில் விமானம் மூலமாக சென்னை திரும்புகிறாா்.
தென் மாவட்டங்களில் தனது பயணத்தை செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு செய்கிறாா்.
ஆங்கிலப் புத்தாண்டு புதன்கிழமை பிறக்கவுள்ள நிலையில் அவரை அமைச்சா்கள், திமுக நிா்வாகிகள், கூட்டணிக் கட்சித் தலைவா்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவிக்கவுள்ளனா்.