செய்திகள் :

இன்று 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

post image

தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்பட 4 மாவட்டங்களில் வியாழக்கிழமை (செப்.11) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வியாழக்கிழமை (செப்.11) முதல் செப்.16-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும்.

இதில், குறிப்பாக செப்.11-இல் செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் செப்.11-இல் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திண்டுக்கல்லில் 80 மி.மீ. மழை பதிவானது. மேலும், துறையூா் (திருச்சி), ஆலங்காயம் (திருப்பத்தூா்) - தலா 70 மி.மீ., வேடசந்தூா் (திண்டுக்கல்), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்), கொடைக்கானல் (திண்டுக்கல்) தலா 60 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக்கடலில் செப்.11 முதல் செப்.13-ஆம் தேதி வரை மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓசூர் மாநாட்டில் 92 ஒப்பந்தங்கள் மூலம் 49,353 வேலைவாய்ப்பு!

ஓசூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ரூ. 24,307 கோடி முதலீட்டில் 49,353 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிடும் வகையில் 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள... மேலும் பார்க்க

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை!

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு ஒரிசா – வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.தென்னிந்திய பகுத... மேலும் பார்க்க

ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை: அன்புமணி தரப்பு

பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து அன்புமணியை நீக்குவதற்கு ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை என்று கட்சியின் மூத்த நிர்வாகி வழக்கறிஞர் கே. பாலு தெரிவித்துள்ளார்.பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவின் நோட்டீஸுக்கு பத... மேலும் பார்க்க

நாம் படைத்த சாதனைகளை நாமே முறியடிக்கிறோம்: ஒசூரில் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

ஒசூர் : தொழில்துறையில் தமிழகம் படைத்த சாதனைகளை தமிழகமே முறியடித்து வருவதாக ஒசூரில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறியிருக்கிறார்.ஒசூரில் இன்று காலை தொ... மேலும் பார்க்க

மதுபோதை + கூகுள் மேப் = கடலுக்குள் இறங்கிய கார்!

சிதம்பரம்: மதுபோதையில் கூகுள் மேப்பை பின்பற்றி காரை இயக்கிய ஓட்டுநர், தவறுதலாக கடலுக்குள் காரை இறக்கியுள்ளார்.சென்னையைச் சேர்ந்த 5 பேர், கடலூர் வழியாக காரில் பயணம் செய்துள்ளனர். கடலூர் துறைமுகத்திலிரு... மேலும் பார்க்க

தமிழக முன்னேற்றத்துக்காக உழைக்கும் முதல்வர் ஸ்டாலின்: டிஆர்பி ராஜா

ஒசூர் : தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்காக ஒவ்வொரு நாளும் உழைத்துக் கொண்டிருக்கிறார் நமது முதல்வர் என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.ஒசூரில் இன்று நடைபெற்ற தொழில் முதலீட்டாளர் மாநாட்... மேலும் பார்க்க