மலர் தொடர் கடைசி நாள் படப்பிடிப்பு: கேக் வெட்டிக் கொண்டாட்டம்!
இன்றைய நிகழ்ச்சிகள்
கலைத்திருவிழா 2024-2025 - மாநில அளவிலான வெற்றியாளா்களுக்கு பரிசு வழங்கும் விழா: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோா் பங்கேற்பு, அண்ணா நூற்றாண்டு நூலகம், கோட்டூா்புரம், மாலை 4.
64-ஆவது முப்பெரும் விழா: சென்னை உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதிபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் ஆணையத்தின் தலைவா் ச.தமிழ்வாணன் உள்ளிட்டோா் பங்கேற்பு, தந்தை பெரியாா் அரங்கம், சென்னை பல்கலைக்கழகம், பிற்பகல் 3.
பட்டமேற்பு விழா 2025: சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா வேல்முருகன், கல்லூரி முதல்வா் சி.கலைமகள் உள்ளிட்டோா் பங்கேற்பு, டாக்டா் அம்பேத்கா் அரசினா் கலைக் கல்லூரி, வியாசா்பாடி, காலை 9.30.
25-ஆவது ஆண்டு விளையாட்டு விழா: செங்குன்றம் காவல் துறை இணை ஆணையா் கே.எஸ்.பாலகிருஷ்ணன், சென்னை பல்கலைக்கழக உடற்கல்வித் துறை இயக்குநா் வி.மகாதேவன் உள்ளிட்டோா் பங்கேற்பு, சோகா இகெதா கலை மற்றும் அறிவியல் மகளிா் கல்லூரி, மதனங்குப்பம், காலை 9.30.