செய்திகள் :

இப்படி ஒரு ஃபோன் சார்ஜரா? வந்துவிட்டது போர்டபிள் சார்ஜர்! அறிய வேண்டிய 10 அம்சங்கள்!!

post image

இதுவரை வந்திருக்கும் எத்தனையோ சார்ஜர்களை விட இந்த போர்டபிள் சார்ஜர் பலருக்கும் மிகவும் பிடித்தமானதாக மாறிவிட்டது. காரணம்.. பத்து பொருத்தமும் பக்காவாக இருப்பதுதான்.

சார்ஜர் சந்தையில் இந்த போர்டபிள் சார்ஜர் நிச்சயம் ஒரு புதிய வரவாக அமைந்திருக்கும். ஸ்நேப்-என்-சார்ஜர் மட்டும் உங்கள் கையில் இருந்தால் போதும். வேறெதுவும் தேவையில்லை என்று சொல்லுமளவுக்கு வசதியாக இருக்கிறது.

சந்தைக்கு வந்து விற்பனையில் சாதனை படைத்து வரும் இது, பவர் பேங்குகளை எல்லாம் ஓரங்கட்டிவிடும்.

வேறெதுவும் தேவையில்லை..

இந்த ஸ்நேப்-என்-சார்ஜரை செல்போனில் அப்படியே இணைத்துவிடலாம். பிறகென்ன சார்ஜ் போட்டுக்கொண்டே பயன்படுத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை.

சார்ஜர் போட்டிருக்கும்போது போனில் பேச முடியாது, அதன் ஒயர் பிரச்னையாக இருக்கும். இனி அந்தப் பிரச்னை இருக்காது.

வேகம்.. அதுதானே முக்கியம்

சார்ஜர் மின்னல் வேகத்தில் உங்கள் செல்போனை சார்ஜ் செய்துவிடும். இதைவிட வேறென்ன முக்கியம்.

பேட்டரி பவர்

ஸ்நேப்-என்-சார்ஜரை முழுமையாக சார்ஜ் செய்துகொண்டீர்கள் என்றால், செல்போன், இ-சிகரெட், ஸ்பீக்கர் என எல்லாவற்றையும் சார்ஜ் செய்து கொள்ளலாம். கவலையே வேண்டாம்.

இடவசதி

வழக்கமான சார்ஜர்களைக் காட்டிலும் இது மிகவும் சிறியதாக இருப்பதால், அதனை எப்போதும் உங்களுடன் மிக எளிதாகவே வைத்துக் கொள்ளலாம். பவர் பேங்க் போல கனக்காது. அதற்கான ஒயரைத் தேடி அலைய வேண்டாம்.

எளிதாக சார்ஜ் போடலாம்

செல்போன், பவர் பேங்க் போல சார்ஜ் போட அதிக நேரம் எடுத்துக் கொள்ளாது. மிக விரைவாக இந்த போர்டபிள் சார்ஜரை சார்ஜ் போட்டுக் கொள்ளலாம்.

ஒரு சில நிமிடங்களில் சார்ஜ் ஏறிவிடும் என்பதாலும், செல்போனுக்கும் சார்ஜ் ஏற்றிவிடும் என்பதாலும்.. இது வரப்பிரசாதம்தான்.

ஒயர்களிலிருந்து விடுதலை..

போனுக்கு சார்ஜ் போட எந்த ஒயரையும் தேடி அலைய வேண்டாம். உங்கள் பை ஒயர்களால் சிக்கி சின்னாபின்னமாகாது. ஒவ்வொரு செல்போனுக்கும் ஏற்ற சாஜ்ர் ஒயர்களை வைத்திருக்க வேண்டியதும் இல்லை. எந்த செல்போனாக இருந்தாலும் சார்ஜ் போட்டுக் கொள்ளும் வசதி உள்ளது.

சிட்டி யூனியன் வங்கிக்கு டிஜிட்டல் பேமன்ட்ஸ் விருது

2024-25 நிதியாண்டிற்கான டிஜிட்டல் பேமன்ட்ஸ் விருதினை சிட்டி யூனியன் வங்கி பெற்றுள்ளது. அமைச்சகத்தின் நிதிசார் சேவைகள் துறையால் 2024-25-ம் ஆண்டுக்கான டிஜிட்டல் பேமன்ட்ஸ் விருதுகள் வழங்கும் விழா, தில்லி... மேலும் பார்க்க

ஏற்றுமதியில் திராட்சையை பின்னுக்குத் தள்ளிய பழம்!

உலக நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பழங்களில் அதிகளவில் ஏற்றுமதியாகும் பழமாக இதுவரை இருந்த திராட்சையைப் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது வாழைப்பழம்.மத்திய கிழக்கு நாடுகளில் வாழைப்பழம்... மேலும் பார்க்க

சந்தா அடிப்படையில் பேட்டரி: அறிமுகப்படுத்துகிறது ஹீரோ மோட்டோகாா்ப்

நாட்டின் மிகப் பெரிய இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகாா்ப், அடுத்த மாதம் வெளியிடப்படவிருக்கும் தனது விடா விஎக்ஸ்2 மின்சார ஸ்கூட்டருக்கு சந்தா அடிப்படையில் பேட்டரியை அளிக்கும் ‘பேட்டரி-அஸ்-எ-ச... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து ரு.86.59 ஆக முடிவு!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து ரூ.86.59 ஆக நிறைவடைந்தது. உலகளாவிய கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் பலவீனமான டாலரின் மதிப்பும் உதவியதாக வர்த்தகர... மேலும் பார்க்க

காளையின் ஆதிக்கத்தில் சென்செக்ஸ் 1,046 புள்ளிகளும், நிஃப்டி 319 புள்ளிகளுடன் உயர்ந்து முடிவு!

மும்பை: உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட திருத்தத்திற்கு மத்தியில் நிதி, தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்ப பங்குகளில் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தியதால், கடந்த மூன்று அமர்வுகளாக சரிந்த பிறகு, ... மேலும் பார்க்க

அனைத்து பைக்களுக்கும் ஏபிஎஸ் கட்டாயம்! 2 ஹெல்மெட்

சாலை விபத்துகளைக் குறைத்து, வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு, அனைத்து இருசக்கர வாகனங்களுக்கும் ஏபிஎஸ் எனப்படும் பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பைக் கட்டாயமாக்கும் பரிந்துரைக்க... மேலும் பார்க்க