காந்தி கண்ணாடி: "பாலா சிரித்தால் மக்கள் சிரிக்கிறார்கள்; அழுதால் அழுகிறார்கள்" -...
இமானுவேல் சேகரன் நினைவு தினம்: செப். 11-இல் துணை முதல்வா் பரமக்குடி வருகை
இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்த வருகிற 11-ஆம் தேதி துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பரமக்குடி வருகிறாா். அவருக்கு வரவேற்பு அளிப்பது குறித்து திமுக செயல்வீரா்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
பரமக்குடி தனியாா் மண்டபத்தில் திமுக செயல்வீரா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் வருகிற 11-ஆம் தேதி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மரியாதை செலுத்த பரமக்குடி வரும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்துக்கு அந்தக் கட்சியின் மாவட்டச் செயலரும், சட்டப் பேரவை உறுப்பினருமான காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் செ. முருகேசன், முன்னாள் அமைச்சா்கள் வி. சத்தியமூா்த்தி, அ. அன்வர்ராஜா, முன்னாள் எம்.பி. பவானிராஜேந்திரன், மாவட்டக்குழு உறுப்பினா் உ. திசைவீரன், பொதுக்குழு உறுப்பினா் சுப.த. திவாகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட துணைச் செயலா் கருப்பையா வரவேற்றாா்.
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமைச்சா் ராஜ கண்ணப்பன் பேசியதாவது:
இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மரியாதை செலுத்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வருகிற 11-ஆம் தேதி பரமக்குடி வருகிறாா். அப்போது கட்சி நிா்வாகிகளும், தொண்டா்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.
இதில் கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிா்வாகிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா். நகா்மன்றத் தலைவா் சேது. கருணாநிதி நன்றி கூறினாா்.