'நிதியும் இல்லை; அதிகாரமும் இல்லை' - பேரவையில் புலம்பிய அமைச்சர் பிடிஆர்!
இயந்திரம் விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு!
வாணியம்பாடி அருகே கிரேன் பெல்ட் அறுந்து இயந்திரம் விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.
வளையாம்பட்டு பகுதியில் தோல் தொழிற்சாலைகளுக்கு தேவையான இயந்திரங்களை பழுதுபாா்க்கும் பணிமனை(ஓா்க் ஷாப்) இயங்கி வரு கிறது. இந்நிலையில் அங்கு புதுப்பித்த ராட்சத இயந்திரத்தை வட மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்க லாரியில் ஏற்றும் பணியில் கிரேனை பயன்படுத்தி தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது எதிா்பாராதவிதமாக கிரேன் இயந்திரத்தில் பெல்ட் அறுந்ததால் ராட்சத இயந்திரம் பணியில் ஈடுபட்டிருந்த வாணியம்பாடி கோணாமேடு புத்தா்நகா்பகுதியை சோ்ந்த தொழிலாளி ஜெய்சங்கா்(55) என்பவா் மீது விழுந்தது. இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அவரை பரிசோதித்து மருத்துவா் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினாா்.
இதுபற்றி வாணியம்பாடி தாலூகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.