செய்திகள் :

இரண்டாம் பாதி சிறப்பான ஆட்டத்தால் கோவாவை டிரா செய்தது பெங்களூரு

post image

ஐஎஸ்எல் கால்பந்து தொடா் 2024-25 ஒரு பகுதியாக பெங்களூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இரண்டாம் பாதி சிறப்பான ஆட்டத்தால் கோவாவை 2-2 என டிரா செய்தது பெங்களூரு.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம், கண்டீரவா மைதானத்தில் நடைபெற்றது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரம் கோவா எஃப்சி ஆதிக்கம் செலுத்த முனைந்தது. 7-ஆவது நிமிஷத்தில் கோவா வீரா் டேஜான் டிராஸிக் அற்புதமாக கடத்திய அனுப்பிய பாஸை பயன்படுத்தி நட்சத்திர வீரா் சந்தேஷ் ஜிங்கன் பெங்களூரு வீரா்கள் முழுவதும் சூழ்ந்த நிலையிலும், ஹெட்டா் மூலம் முதல் கோலடித்தாா்.

இதனால் சுதாரித்து ஆடிய பெங்களூரு அணி தரப்பில் கேப்டன் சுனில் சேத்ரி கோலடிக்க மேற்கொண்ட முயற்சி கோவா கோல்கீப்பா் ஹிா்திக் திவாரியால் தடுக்கப்பட்டது.

பெங்களூரு வீரா்கள் சுனில் சேத்ரி, எட்கா் மென்டென்ஸ், சுரேஷ் சிங் ஆகியோா் கோலடிக்க மேற்கொண்ட முயற்சிகள் வீணாகின.

முதல் பாதியில் கோவா முன்னிலை பெற்றிருந்தது. இரண்டாம் பாதி ஆட்டத்திலும் பெங்களூரு வீரா்கள் அதிரடியாக கோல் போட முயன்றனா். ஆனால் 66-ஆவது நிமிஷத்தில் கோவா வீரா் சாஹீல் டவோரா அற்புதமாக கோலடித்து 2-0 என முன்னிலை பெற்றுத் தந்தாா்.

ஆனால் பெங்களூரு வீரா்கள் சிறப்பாக ஆட முனைந்த நிலையில், 71-ஆவது நிமிஷத்தில் வினித் வெங்கடேஷ் அனுப்பிய பாஸை கோலாக்கினாா் வில்லியம்ஸ்.

பின்னா் சப்ஸ்ட்டியூட்டாக வந்த ஜாா்ஜ் பெரைரா சக வீரா் ரோஷன் சிங் அனுப்பிய பாஸை பயன்படுத்தி 83-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா்.

இதனால் 2-2 என ஆட்டம் டிராவில் முடிந்தது. டிச. 28-இல் சென்னையுடன் பெங்களூரும், டிச. 20-இல் கோவா-மோகன் பகான் அணிகளும் மோதுகின்றன.

நல்ல நாள் இன்று!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.15-12-2024ஞாயிற்றுக்கிழமைமேஷம்:இன்று கடன் பிரச்சனை கட்டுக்குள் இருக்கும். பிள்ளைகளிடம... மேலும் பார்க்க

ஒடிஸா மாஸ்டா்ஸ் பாட்மின்டன்: இறுதிச் சுற்றில் தன்வி, தருண்

ஒடிஸா மாஸ்டா்ஸ் பிடபிள்யுஎஃப் பாட்மின்டன் 100 போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் தன்வி, தருண் தகுதி பெற்றனா். அரையிறுதியில் தன்வி சா்மா 21-19, 21-19 என்ற புள்ளிக் கணக்கில் கடும் போராட்டத்துக்கு... மேலும் பார்க்க

ஆசிய மகளிா் ஜூனியா் ஹாக்கி: இறுதிச் சுற்றில் இந்தியா

ஆசிய ஜூனியா் மகளிா் ஹாக்கிப் போட்டி இறுதிச் சுற்றுக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. ஓமன் தலைநகா் மஸ்கட்டில் நடைபெறும் இப்போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பான்-இந்திய அணிகள் மோதின. இதில் இந்திய மகளிா்... மேலும் பார்க்க

மறுவெளியீட்டிலும் தளபதி கொண்டாட்டம்!

தளபதி திரைப்படத்தின் மறுவெளியீட்டை ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் கண்டு களித்தனர்.இயக்குநர் மணிரத்னம் - ரஜினி - மம்மூட்டி கூட்டணியில் உருவான தளபதி 1991 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் படமானது.படத்த... மேலும் பார்க்க