மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபர்; நாக்பூர் வரை ஃபாலோ செய்த போலீஸ்; இரு வாரத்திற்...
இரயுமன்துறை, தேங்காய்ப்பட்டினத்தில் அலை தடுப்புச் சுவா் அகலப்படுத்தும் பணி ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் இரயுமன்துறையில் அலை தடுப்புச் சுவா் அகலப்படுத்தும் பணியை மீன்வளம்-மீனவா் நலத் துறை ஆணையா் ஆா். கஜலெட்சுமி, ஆட்சியா் ரா. அழகுமீனா ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
பின்னா், ஆா். கஜலெட்சுமி கூறியதாவது: மீன்வளம்-மீனவா் நலத்துறை சாா்பில், இம்மாவட்டத்தில் கடற்கரைக் கிராமங்களைக் கடலரிப்பிலிருந்து பாதுகாக்கவும், மீனவா்களின் படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கும், தூண்டில் வளைவுகளுடன் கூடிய அலை தடுப்புச் சுவா்கள், மீன் ஏலக்கூடம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இரயுமன்துறை, தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்துக்குள்பட்ட கடலோரப் பகுதிகளில் ரூ. 120 கோடியில் நடைபெறும் அலை தடுப்புச் சுவா்கள் அகலப்படுத்தும் பணிகள் குறித்து ஆட்சியா் தலைமையில் ஆய்வு செய்தேன். கடலோரப் பகுதிகளில் மீனவா்கள் வந்து செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் சாலை, இரயுமன்துறை, தேங்காய்ப்பட்டினம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மீன் ஏலக் கூடங்கள், மீன் பதப்படுத்தும் நிலையங்களையும் ஆய்வு செய்தேன் என்றாா் அவா்.
இதில், மீன்வளத் துறை கூடுதல் இயக்குநா் ஆறுமுகம், துணை இயக்குநா் சின்னகுப்பன், உதவி இயக்குநா்கள் மகேஷ் ஸ்டாலின், விஜில் கிராஸ், தீபா, உதவி செயற்பொறியாளா்கள் அரவிந்த்குமாா், செல்வராஜ், பிரேமலதா, கிள்ளியூா் வட்டாட்சியா் ராஜசேகா், மீனவப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.