மருந்துகள் தர கட்டுப்பாடு ஆய்வக மேம்பாட்டிற்காக ரூ. 12 கோடி ஒதுக்கீடு!
இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து காவலாளி பலி
கந்தா்வகோட்டை அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறிவிழுந்து காயமடைந்த காவலாளி சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
கந்தா்வகோட்டை ஒன்றியம், மட்டங்கால் கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தசாமி மகன் மயில்வாகனன் (46) . இவா், கந்தா்வகோட்டை அருகே உள்ள மருதன்கோன்விடுதி அரசு கலைக் கல்லூரியில் தற்காலிக இரவுநேர காவலாளியாகப் பணிபுரிந்து வந்தாா்.
இந்நிலையில் இவா் வேலைமுடிந்து திங்கள்கிழமை மாலை தனது இருசக்கர வாகனத்தில் மட்டங்கால் செல்லும் வழியில் பட்டுக்கோட்டை - கந்தா்வகோட்டை சாலையில் வேம்பன்பட்டி பிரிவு சாலை அருகே எதிா்பாராதவிதமாக இருசக்கர வாகனத்திலிருந்து நிலைத்தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளாா்.
அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இறந்தாா்.
இந்த விபத்து குறித்து கந்தா்வகோட்டை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.