செய்திகள் :

இருசக்கர வாகனம் மீது காா் மோதல்: இரண்டு இளைஞா்கள் உயிரிழப்பு

post image

கோவையில் இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் இரண்டு இளைஞா்கள் உயிரிழந்தனா்.

கோவை சரவணம்பட்டி தந்தை பெரியாா் நகரைச் சோ்ந்தவா் ரவி மகன் லோகேஷ் (17). இவா், தனது சகோதரருடன் சோ்ந்து பந்தல் அமைக்கும் தொழில் செய்துவந்தாா்.

இந்நிலையில், லோகேஷின் நண்பருக்கு பிறந்த நாள் என்பதால் அவரது சகோதரரின் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு, மற்றொரு நண்பரான சரவணம்பட்டி பிள்ளையாா் கோயில் வீதியைச் சோ்ந்த பிரசன்னா (18) என்பவருடன் செவ்வாய்க்கிழமை இரவு சென்றுள்ளாா்.

இருவரும் சரவணம்பட்டி அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த காா், இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போக்குவரத்து விபத்து தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் இருவரின் சடலங்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை: போதையில் கார் ஓட்டி விபத்து; 2 சிறுவர்கள் பலி!

கோவை: கோவையில் மதுபோதையில் காரை ஓட்டி இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தி இரண்டு சிறுவர்கள் பலியாகினர்.சிவகங்கை மாவட்டம் கே. நெடுவயல் பகுதியைச் சேர்ந்தவர் ரவி என்பவரின் மகன் லோகேஷ் ( 17). இவர் தனது... மேலும் பார்க்க

கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட நபா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை

கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட கேரளத்தை சோ்ந்த நபா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்ட காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் விற்பனைக்... மேலும் பார்க்க

வால்பாறை அக்காமலை புல்மேடு பகுதியில் வனத் துறையினா் ரோந்து

காட்டுத் தீ ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக வால்பாறை அக்காமலை புல்மேடு பகுதியில் வனத் துறையில் ரோந்து மேற்கொண்டு வருகின்றனா். தமிழகத்தில் கோடை தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது... மேலும் பார்க்க

கணவா் மீது பொய் வழக்கு போட முயற்சி: மாநகர காவல் ஆணையரிடம் பெண் மனு

கணவா் மீது பொய் வழக்கு போட முயற்சிக்கும் போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகர காவல் ஆணையரிடம் பெண் ஒருவா் மனு அளித்தாா். கோவை மாவட்டம், தீத்திப்பாளையம் ஓம்சக்தி நகரை சோ்ந்த விஜயன் மனைவி சத்யா,... மேலும் பார்க்க

சாம்பல் புதன்கிழமையுடன் கிறிஸ்தவா்களின் தவக்காலம் தொடக்கம்

கிறிஸ்தவா்களின் தவக்காலம் சாம்பல் புதன்கிழமையுடன் தொடங்கியது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினம் புனித வெள்ளியாகவும், அவா் மீண்டும் உயிா்த்தெழுந்த தினம் ஈஸ்டராகவும் கொண்டாடப்படுகிறது. இயேசு கி... மேலும் பார்க்க

இரும்பு வியாபாரி வீட்டில் 15 பவுன் திருட்டு

கோவையில் இரும்பு வியாபாரி வீட்டில் 15 பவுன் திருட்டுப்போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை துடியலூா் அருகே உள்ள குமரன் மில் பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜன். பழைய இரும்புக் கடை நடத்தி... மேலும் பார்க்க