கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!
இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
சூளகிரி அருகே இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம், ஓமலூா் வட்டம், ஆரூா்பதி இந்திரா நகரைச் சோ்ந்தவா் செல்லதுரை (25). இவரும், ஓமலூரை சோ்ந்த சரத் (24) என்பவரும் இருசக்கர வாகனத்தில் ஒசூா் நோக்கி 13-ஆம் தேதி மாலை சென்று கொண்டிருந்தனா். கிருஷ்ணகிரி - ஒசூா் தேசிய நெடுஞ்சாலை சூளகிரி அணுகு சாலை அருகில் சென்றபோது, எதிரே வந்த இருசக்கர வாகனம் இவா்கள் சென்ற வாகனத்தின் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த செல்லதுரை சூளகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். படுகாயமடைந்த சரத் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். விபத்து குறித்து சூளகிரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.