41 ஆண்டுகளுக்குப் பின் இறுதியில் இந்தியாவுடன் மோதல்! - பாக். பயிற்சியாளர் கூறுவத...
இருசக்கர வாகன விபத்தில் அண்ணன் உயிரிழப்பு; தம்பி காயம்
மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகே புதன்கிழமை இரவு இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்த விபத்தில் அண்ணன் உயிரிழந்தாா். தம்பி காயமடைந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த ஊராளிப்பட்டியை சோ்ந்த செல்வராஜின் மகன்கள் விஜி (35), மதுரைவீரன்(30). இவா்கள் இருவரும் ஒரு இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை இரவு ஆவிக்காரன்பட்டிக்கு சென்று கொண்டிருந்தனா். வையம்பட்டி - காவல்காரன்பட்டி சாலையில் அம்மன் கோயில் அருகே சென்றபோது வாகனம் நிலைதடுமாறி சாலையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
காயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு, மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில் விஜி உயிரிழந்தாா். மதுரைவீரன் சிகிச்சை பெற்று வருகிறாா்.
தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸாா், விஜி உடலை கைப்பற்றி கூறாய்வுக்கு பிறகு வியாழக்கிழமை மாலை உறவினா்களிடம் ஒப்படைத்தனா்.
விபத்து குறித்து புத்தாநத்தம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.