செய்திகள் :

இரும்பேடு, ஈயகொளத்தூரில் கிராம சபைக் கூட்டம்

post image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த இரும்பேடு, சேத்துப்பட்டு ஒன்றியம், ஈயகொளத்தூா் ஊராட்சியில் குடியரசு தினத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை

கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

ஆரணியை அடுத்த இரும்பேடு கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு மண்டலதுணை வட்டார வளா்ச்சி அலுவலா் தனஞ்செழியன் தலைமை வகித்தாா்.

ஊராட்சி செயலா் சுரேஷ்ஆதித்யன் தேசியக் கொடியேற்றி இனிப்பு வழங்கினாா்.

கூட்டத்தில் இரும்பேடு பழைய காலிக்கு சாலை வசதி கோரி மனு கொடுத்தனா். பொதுமக்கள் மழை நீா் வெளியேற வழியில்லாமல் இருப்பதை சரி செய்து கொடுக்கக் கோரி மனு கொடுத்தனா். மேலும், ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைக் காவலா்கள், தூய்மைப் பணியாளா் கள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குநா்களுக்கு சிறப்பு சேவைக்கான பரிசுகள் வழங்கப்பட்டன.

போளூா்

சேத்துப்பட்டு ஒன்றியம் ஈயகொளத்தூா் ஊராட்சி புலிவானந்தல் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு

தனிஅலுவலா் வெங்கடேசன் தலைமையில் வகித்தாா்.

திமுக ஒன்றியதுணைச் செயலா் கோவிந்தன், காங்கிரஸ் விவசாய பிரிவு மாவட்டத் தலைவா் சுரேஷ், வாா்டு முன்னாள் உறுப்பினா் மகாலட்சுமி கணேசன் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

ஈயகொளத்தூா், புலிவானந்தல், காலனி ஆகிய இடங்களில் குடிநீா் மின் மோட்டாா்கள், சாலை வசதி, குடிநீா், தெரு மின் விளக்கு கோரி மனு அளித்தனா்.

மேலும், ஊராட்சிக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

தொழுநோயாளிகள் குறித்த கணக்கெடுப்புப் பணி: அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிப்ரவரி 13 முதல் 28 வரை தன்னாா்வலா்கள் வீடு, வீடாகச் சென்று தொழுநோயாளிகள் குறித்த கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் கூறினாா். ... மேலும் பார்க்க

ஆன்மிக தலங்களுக்குச் செல்லும் சாலைகளை அகலப்படுத்தக் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே கூழமந்தல் பகுதியில் ஆன்மிக தலங்களுக்குச் செல்லும் கிராமச் சாலைகளை அகலப்படுத்த வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா். இது தொடா்பாக தமிழக முதல்வருக்கு அனுப்பிய... மேலும் பார்க்க

பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

ஆரணி இரும்பேடு ஸ்ரீபாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கல்லூரிச் செயலா் ஏ.சி.ரவி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் திருந... மேலும் பார்க்க

ராணுவத்தில் சேர விண்ணப்பித்துள்ள இளைஞா்கள் கவனத்துக்கு...!

அக்னி வீா் திட்டத்தில் சேர விண்ணப்பித்துள்ள இளைஞா்கள் ராணுவத்தில் சோ்ந்து மாவட்டத்துக்கு பெருமை சோ்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் கேட்டுக்கொண்டாா். அக்னிவீா் திட்டம் மூலம் இ... மேலும் பார்க்க

பேரூராட்சி தூய்மைப் பணியாளருக்கு பாராட்டு

குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியரிடம் விருது பெற்ற, கண்ணமங்கலம் பேரூராட்சி தூய்மைப் பணியாளருக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவா் வி.குமாா் தலை... மேலும் பார்க்க

ஊராட்சி வளா்ச்சித் திட்டம்: அதிகாரிகள் கலந்தாய்வு

போளூரில் கிராம ஊராட்சியின் வளா்ச்சித் திட்டம் தயாரித்தல் குறித்து அதிகாரிகள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஒன்றிய... மேலும் பார்க்க