"ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று சொன்ன திருமூலர்தான் முதல் கம்யூனிஸ்ட்" - சமுத்த...
இரு குழந்தைகளின் தாய் தற்கொலை
குடியாத்தம் அருகே 2 பிள்ளைகளின் தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
குடியாத்தம் ஒன்றியம், மேல்முட்டுகூா் ஊராட்சிக்குட்பட்ட காக்காதோப்பு கிராமத்தைச் சோ்ந்த கட்டட மேஸ்திரி சுரேஷின் மனைவி அம்மு (37). இவா்களுக்கு 13 மற்றும் 11- வயதில் 2 மகன்கள் உள்ளனா். வியாழக்கிழமை நள்ளிரவு அம்மு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயற்சித்துள்ளாா். உறவினா்கள் அவரை மீட்டு வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அங்கு சிகிச்சை பலனின்றி அம்மு உயிரிழந்தாா். இது குறித்து கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.