இரு தனியார் நிலவு ஆய்வு கலங்களை விண்ணில் செலுத்தியது ஸ்பேஸ்-எக்ஸ்
கேப் கனாவெரல்: நிலவில் இறங்கி ஆய்வு செய்வதற்காக இரு தனியார் விண்கலங்களை அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்குக்குச் சொந்தமான விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸ் புதன்கிழமை விண்ணில் செலுத்தியது.
ஃபுளோரிடா மாகாணம், கேப் கனாவரெலில் உள்ள நாசாவின் ஏவுதளத்திலிருந்து அமெரிக்காவின் ஃபைர்ஃப்ளை ஏரோஸ்பேஸ் நிறுவனம், ஜப்பானின் ஐஸ்பேஸ் ஆகிய நிறுவனங்களின் ஆய்வுக்கலங்களை அவற்றின் தனித்தனி சுற்றுப்பாதைகளில் வெற்றிகரமாகக் கொண்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலவில் இறங்கி ஆய்வு மேற்கொள்ளும் ஜப்பானிய ஐஸ்பேஸ் நிறுவனத்தின் இரண்டாவது முயற்சி இது. ஏற்கெனவே அந்த நிறுவனம் நிலவில் இரு ஆண்டுகளுக்கு முன்னர் தரையிறக்க முயன்ற ஆய்வுக் கலம் விழுந்து நொறுங்கியது நினைவுகூரத்தக்கது.