செய்திகள் :

இறுதி பலப்பரீட்சை இன்று தொடக்கம்: ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா மோதல்

post image

லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா மோதும் இறுதி ஆட்டம், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் புதன்கிழமை (ஜூன் 11) தொடங்குகிறது.

ஒருநாள் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை என, ஐசிசியின் அனைத்துப் போட்டிகளிலுமாக 10 கோப்பைகள் கைப்பற்றியுள்ள ஆஸ்திரேலியாவும், ஒரேயொரு முறை சாம்பியன்ஸ் கோப்பை வென்றுள்ள தென்னாப்பிரிக்காவும் சந்தித்துக்கொள்ளும் ஆட்டம் இது. இந்த இறுதி ஆட்டத்துக்கான 2023-25 டெஸ்ட் சுழற்சியில் இவ்விரு அணிகளும் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய அணியை பொருத்தவரை ஐசிசி போட்டிகள் என்று வரும்போது வழக்கத்தை விட சிறப்பாக ஆடுவதுடன், அதிலேயே இறுதி ஆட்டம் என்று வந்தால் தனது ஆகச் சிறந்த ஆட்டத்தை தவறாமல் வெளிப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

நடப்பு சாம்பியனாக களம் காணும் ஆஸ்திரேலிய அணியில், 2023-இல் சாம்பியனான அணியிலிருந்த பெரும்பான்மையானோர், இந்த அணியிலும் இருக்கின்றனர். டேவிட் வார்னர் ஓய்வு பெற்றிருக்கிறார். அந்த ஆட்டத்தில் முக்கியமான பெளலராக இருந்த ஸ்காட் போலண்டுக்கு பதிலாக, இந்த முறை ஜோஷ் ஹேஸில்வுட் களம் காண்கிறார்.

அவர் தவிர நேதன் லயன், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் பெளலிங்கிலும், ஸ்மித், அலெக்ஸ் கேரி, உஸ்மான் கவாஜா, சாம் கான்ஸ்டஸ் ஆகியோர் பேட்டிங்கிலும் பலம் சேர்க்கின்றனர்.

தென்னாப்பிரிக்க அணியை பொருத்தவரை, அனுபவத்துடன் கூடிய அசத்தலான நட்சத்திரம் என எவரையும் குறிப்பிட முடியாது என்றாலும், அணியின் தேவைக்கு அவசியமறிந்து பங்களிக்கும் வீரர்கள் வரிசையைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 2023-25 டெஸ்ட் சுழற்சியில் அந்த அணி விளையாடிய ஆட்டங்களே அதற்கு உதாரணம். அதில் சுமார் 30 வீரர்களை சுழற்சி முறையில் அந்த அணி பயன்படுத்த, ஒவ்வொரு ஆட்டத்திலும் ஏதேனும் ஒரு வீரர் ரன்கள் குவிக்கவோ, விக்கெட்டுகள் சாய்க்கவோ செய்து அணிக்கு கை கொடுத்தார்.

கடைசி 7 டெஸ்ட்டுகளில் வென்று, முதல் அணியாக இந்த இறுதி ஆட்டத்துக்கு தென்னாப்பிரிக்கா தகுதிபெற்றது குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்க தரப்பில் குறிப்பிடத்தக்க வீரர்களாக பெளலர்கள் ககிசோ ரபாடா, மார்கோ யான்சென், பேட்டர்கள் எய்டன் மார்க்ரம், டெம்பா பவுமா, ரயான் ரிக்கெல்டன் ஆகியோர் உள்ளனர்.

ஆமீர் கான் - லோகேஷ் கனகராஜ் படத்தின் படப்பிடிப்பு எப்போது?

நடிகர் ஆமீர் கான் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகவிருக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய வெற்றி திரைப்படங்களின் ... மேலும் பார்க்க

கூலி, குபேரா பட அனுபவம் பகிர்ந்த நாகார்ஜுனா..!

நடிகர் நாகார்ஜுனா கூலி, குபேரா படங்களில் முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது எனக் கூறியுள்ளார். தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள கூலி படத்திலும் சேகர் கம்முலா இயக்கியுள்ள கு... மேலும் பார்க்க

நடிப்பின் ஆற்றல் நிலையம் ஜி.வி.பிரகாஷ்..! பிறந்தநாளுக்கு இயக்குநர் வாழ்த்து!

நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் பிறந்த நாளில் இம்மார்ட்டல் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.இந்தப் படத்தில் கயாது லோஹர் நாயகியாக நடிக்கிறார். அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இந்தப் படத்தை இயக்குகிறார். இச... மேலும் பார்க்க

இயக்குநர் எனத் தெரியாமலேயே படத்தைப் புகழ்ந்து பேசிய ஆட்டோ ஓட்டுநர்..! அபிஷன் ஜீவிந் நெகிழ்ச்சி!

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் நடிகர் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் மே.1 ஆம் தேதி வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை நடிகர்கள் ரஜினி, சூ... மேலும் பார்க்க

குஜராத் விமான விபத்து! குபேரா முன்வெளியீடு ஒத்திவைப்பு!

நடிகர் தனுஷின் குபேரா படத்தின் முன்வெளியீட்டு நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாகார்ஜுனாவும் நடிகர் தனுஷும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளதால் குபேரா மீதா... மேலும் பார்க்க