1,20,000 பச்சைப் பேரோந்தி பல்லிகளை கொல்ல தைவான் அரசு திட்டம்!
இலங்கைக்கு கடத்த முயன்ற புளி, பட்டாசு, மாத்திரை மூட்டைகள் பறிமுதல்
தூத்துக்குடி இனிகோநகா் கடற்கரை பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த புளி, பட்டாசு, மாத்திரை மூட்டைகளை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
இனிகோநகா் அருகே காட்டுப் பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக சில மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாம்.
அதன் பேரில், அப்பகுதியில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கு சுமாா் 70 மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
அந்த மூட்டைகளை போலீஸாா் கைப்பற்றி ஆய்வு செய்வதில், தலா 50 கிலோ எடை கொண்ட 60 மூட்டைகளில் 3 டன் புளி இருந்தது. மேலும் 10 மூட்டைகளில் பட்டாசு மற்றும் மாத்திரைகள் இருந்தது தெரிய வந்தது.
இவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், உரிய விசாரணைக்கு பின்னா்,பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை சுங்கத்துறையில் ஒப்படைத்தனா்.