செய்திகள் :

இலங்கையில் அதானி காற்றாலை திட்டம்: மறுஆய்வு செய்ய குழு அமைப்பு

post image

இலங்கையின் மன்னாா், பூநகரியில் அதானியின் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை மறுஆய்வு செய்ய அந்நாட்டு அரசு குழு அமைத்துள்ளது.

இலங்கையின் மன்னாா், பூநகரி ஆகிய பகுதிகளில் 440 மில்லியன் டாலருக்கும் (சுமாா் ரூ.3,793 கோடி) அதிகமான செலவில், 484 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை மேற்கொள்ள, அந்நாட்டு அரசுடன் அதானி குழுமம் ஒப்பந்தம் மேற்கொண்டது.

இந்தத் திட்டத்தால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படக் கூடும் என்றும், ஒப்பந்தத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் இலங்கை உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

கடந்த ஆண்டு இலங்கை அதிபா் தோ்தலின்போது, அந்நாட்டின் எரிசக்தி துறை உரிமைக்கு அதானி குழுமத்தின் காற்றாலை மின் உற்பத்தித் திட்டம் அச்சுறுத்தலாக இருப்பதால், தான் ஆட்சிக்கு வந்தவுடன் அந்தத் திட்டம் ரத்து செய்யப்படும் என்று அப்போதைய வேட்பாளரும், தற்போதைய அதிபருமான அநுரகுமார திசாநாயக தெரிவித்தாா்.

இந்நிலையில், அந்தத் திட்டத்தை அந்நாட்டு அரசு ரத்து செய்ததாக வெள்ளிக்கிழமை தகவல் வெளியானது. அந்தத் தகவலுக்கு மறுப்புத் தெரிவித்து, அந்நாட்டு அரசின் செய்தித்தொடா்பாளா் நளிந்த ஜயதிஸ்ஸ கொழும்பில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

மன்னாா் மற்றும் பூநகரியில் அதானியின் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை ரத்து செய்ய முடிவு மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் அந்தத் திட்டங்களை மறுஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு தனது பணியை நிறைவு செய்த பின், திட்டத்தில் என்ன மாற்றங்களை கொண்டுவரலாம் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றாா்.

டொனால்ட் டிரம்ப் வெளியிடும் அறிவிப்புகள் அனைத்தும் அமலாகுமா? -உலக வங்கியின் தலைவர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் வெளியிடும் அறிவிப்புகளுக்கு, அவசரகதியில் உடனடியாக பதிலளிக்காமல் பொறுமையாக ஆலோசனை மேற்கொண்டு அதன்பின் செயல்பட அறிவுறுத்தியுள்ளார் உலக வங்கியின் தலை... மேலும் பார்க்க

வரிகளை உயர்த்தினால் எரிசக்தி விநியோகம் துண்டிப்பு... டிரம்ப்புக்கு சவால்விடும் கனடா!

கனடா மீதான இறக்குமதி வரிகளை அமெரிக்கா உயர்த்தினால் அவர்களுக்கு வழங்கும் எரிசக்தி விநியோகத்தைத் துண்டிக்க இருப்பதாக கனடா அரசு தெரிவித்துள்ளது. கனடா நாட்டின் மீதான இறக்குமதி வரிகளை 25% அதிகரித்து அமெரிக... மேலும் பார்க்க

டிரம்ப் எச்சரிக்கை... அடிபணிந்த கொலம்பியா!

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்களை கொலம்பிய அரசு ஏற்றுகொண்டதைத் தொடர்ந்து அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த ஏற்றுமதிக்கான வரி மற்றும் தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது. அமெரிக்கா - கொலம்பியா ... மேலும் பார்க்க

தென்கொரிய விமான விபத்து: என்ஜினில் சிக்கிய பறவை காரணமா?

தென்கொரியாவில் கடந்த மாதம் 181 பேர் பலியாகக் காரணமாக இருந்த விமான விபத்துக்கு, என்ஜினில் பறவையின் மீதங்கள் இருந்ததாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், பறவைதான் காரணம் என்று உறுதிபடத் தெரிவிக்கப்படவி... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு விரைவில் நேரடி விமான சேவை: வங்கதேச தூதா் தகவல்

பாகிஸ்தானுடனான நட்புறவை வலுப்படுத்தும் வகையில் அந்நாட்டுடன் நேரடி விமான சேவை விரைவில் தொடங்கப்படும் என்று இஸ்லாமாபாதில் உள்ள வங்கதேச தூதா் கூறியுள்ளாா். வங்கதேசத்தில் வன்முறைப் போராட்டம் மூலம் பிரதமா... மேலும் பார்க்க

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர புதினுடன் விரைவில் பேச்சு: டிரம்ப் அறிவிப்பு

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடா்பாக ரஷிய அதிபா் புதினுடன் விரைவில் பேசவுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா். மேலும், இஸ்ரேலுக்கு 2,000 பவுண்ட் (சுமாா் 907 கிலோ) வெடிகுண்டு... மேலும் பார்க்க