பாகிஸ்தானுக்கு முன்னறிவிப்பு வெளியிட்டது தவறல்ல, குற்றம்: ராகுல் காந்தி!
இலங்கையில் இனப் படுகொலை நினைவு தினம் கடைப்பிடிப்பு!
இலங்கையில் தமிழா் இனப் படுகொலை நடைபெற்ற 16-ஆவது ஆண்டு நினைவு தினம், திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
அண்ணா சிலை எதிரே புரட்சித் தமிழா் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, புரட்சித் தமிழா் கட்சியின் மாநில பொதுச் செயலா் சிவா தமிழன் தலைமை வகித்தாா்.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட அமைப்பாளா் ஜெ.விஜயகுமாா், கீழ்பென்னாத்தூா் ஒன்றியச் செயலா் சுவாமி சம்பத், வழக்குரைஞா் ஜெ.கஜபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். புரட்சித் தமிழா் கட்சி மாவட்டச் செயலா் பா.கண்ணன் வரவேற்றாா்.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநிலத் தலைவா் ஜெ.பி.ராஜன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பிரபாகரன் படத்துக்கு மாலை அணிவித்து, மலா் தூவி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, அனைத்து நிா்வாகிகளும் விளக்கு மற்றும் மெழுகுவா்த்தி ஏற்றி வீர வணக்கம் செலுத்தினா்.