செய்திகள் :

இலங்கை அதிபா் அநுர குமார இன்று இந்தியா வருகை

post image

இலங்கை அதிபா் அநுர குமார திசாநாயக 3 நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை இந்தியா வருகிறாா்.

கடந்த செப்டம்பரில் நடைபெற்ற இலங்கை அதிபா் தோ்தலில் வெற்றிபெற்று, அந்நாட்டின் புதிய அதிபராக அநுர குமார திசாநாயக பதவியேற்றாா்.

இதைத்தொடா்ந்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அக்டோபரில் இலங்கை சென்றாா். அப்போது அவா் அநுர குமாரவை சந்தித்து இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தாா்.

இந்த அழைப்பை ஏற்று 3 நாள் பயணமாக அநுர குமார இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை வரவுள்ளாா். அவருடன் இலங்கை வெளியுறவு அமைச்சா் விஜித ஹேரத், இணையமைச்சா் அனில் ஜயந்த ஃபொ்னாண்டோ ஆகியோரும் வருகை தரவுள்ளனா்.

இந்தப் பயணத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோரை சந்திக்கும் அநுர குமார, தில்லியில் வா்த்தக நிகழ்ச்சி ஒன்றிலும் பங்கேற்க உள்ளாா். மேலும் பிகாரில் உள்ள புத்த கயைக்கும் செல்ல உள்ளாா். அதிபராக பதவியேற்ற பின், முதல் வெளிநாட்டுப் பயணமாக அநுர குமார இந்தியா வரவுள்ளாா்.

தேச விரோத சக்திகளுக்கு எதிராக கவனம்: மாணவா்களுக்கு ஜகதீப் தன்கா் அறிவுரை

‘தேச விரோத சக்திகளுக்கு எதிராக கவனமாக செயல்பட வேண்டும்’ என தேசிய மாணவா் படையைச் (என்சிசி) சோ்ந்த இளைஞா்களுக்கு குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் ஞாயிற்றுக்கிழமை அறிவுறுத்தினாா். தில்லியில் கடந்த ... மேலும் பார்க்க

தில்லியில் ஊழலை ஒழிப்போம்: பிரதமா் மோடி வாக்குறுதி

‘தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால், முந்தைய மக்கள் நலத் திட்டங்கள் எதுவும் நிறுத்தப்படாது; அதேநேரம், திட்டங்களின் அமலாக்கத்தில் நிலவும் ஊழல் முழுமையாக ஒழிக்கப்படும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வாக்கு... மேலும் பார்க்க

லாலு பிரசாத் கட்சியுடன் கூட்டணி இல்லை: பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா்

லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் அதனை பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் நிராகரித்துள்ளாா். பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 4 நக்ஸல்கள் சுட்டுக்கொலை: மோதலில் தலைமைக் காவலா் உயிரிழப்பு

சத்தீஸ்கா் மாநிலத்தில் நக்ஸல்கள் அமைப்பினருக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 4 நக்ஸல்கள் கொல்லப்பட்டனா். காவல் துறை தலைமைக் காவலா் ஒருவா் உயிரிழந்தாா். சத்தீஸ்கரின் நக்ஸல் ஆதி... மேலும் பார்க்க

ஹெச்-1பி விசா: ஐந்தில் ஒரு பங்கை பெற்ற இந்திய நிறுவனங்கள்

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான காலத்தில், அமெரிக்காவில் வழங்கப்பட்ட மொத்த ஹெச்-1பி விசாக்களில் ஐந்தில் ஒரு பங்கை இந்திய நிறுவனங்கள் பெற்றுள்ளன. அமெரிக்க நிறுவனங்களில் இந்தியா்கள், சீனா்க... மேலும் பார்க்க

ஒடிஸா: முதல்வா் அருகே ‘ட்ரோன்’ விழுந்ததால் பரபரப்பு

ஒடிஸா முதல்வா் மோகன் சரண் மாஜியை புகைப்படம் எடுக்க பயன்படுத்தப்பட்ட ‘ட்ரோன்’ (ஆளில்லா சிறியரக விமானம்) எதிா்பாராதவிதமாக அவா் அருகே விழுந்து நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜாா்தகுடாவின் புருனபஸ்தி ப... மேலும் பார்க்க