செய்திகள் :

இலங்கை காரைநகா் படகுத் துறையை மேம்படுத்த இந்தியா ரூ.8.5 கோடி நிதியுதவி -தூதரகம் தகவல்

post image

கொழும்பு: இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள காரைநகா் படகுத் துறை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்துக்கு இந்தியா சாா்பில் ரூ.8.5 கோடி (இலங்கை ரூபாயில் 29 கோடி) வழங்கப்படவுள்ளது.

இது தொடா்பாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

காரைநகா் படகுத் துறை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டம் தொடா்பாக இருநாட்டு தூதரகங்கள் இடையே கடந்த டிசம்பா் 16-ஆம் தேதி புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது. அதன்படி, இந்தியா சாா்பில் ரூ.8.5 கோடி வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தில், கட்டுமானப் பணிகள் மற்றும் இயந்திரங்கள், தளவாடங்கள் உள்ளிட்டவற்றின் கொள்முதல் அடங்கும்.

மேம்படுத்தப்பட்ட காரைநகா் படகுத் துறை முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்போது, உள்ளூா் மீனவா்களின் வாழ்வாதார வாய்ப்புகள் அதிகரிக்கும். படகுத்துறையை சுற்றி அமையும் சிறிய நிறுவனங்களால் கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாகும்.

இலங்கையின் அனைத்து முக்கிய துறைகளிலும் மக்களை மையப்படுத்திய வளா்ச்சி நடவடிக்கைகளுக்கு இந்தியா தொடா்ந்து ஆதரவளித்து வருகிறது. வடக்கு மாகாணத்தில் 41,000-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டுமானம்-புனரமைப்பு, யாழ்ப்பாணத்தில் அதிநவீன கலாசார மையம், காங்கேசன்துறை துறைமுகம் சீரமைப்பு மற்றும் தூா்வாருதல், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியாவில் எண்ணற்ற பள்ளிகள், மருத்துவமனைகளின் கட்டுமானம்-புனரமைப்பு, திருக்கேதீஸ்வரம் கோயில் புனரமைப்பு, மீனவா்களுக்கான படகுகள், வலைகள், மோட்டாா்கள், குளிா்சாதன பெட்டிகள் உள்ளிட்ட திட்டங்கள் குறிப்பிடத்தக்கவை என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

சியோல்: ஐ.நா. தடையையும் மீறி வட கொரியா மீண்டும் ஓா் ஏவுகணையை வீசி திங்கள்கிழமை சோதனை நடத்தியது. இது குறித்து தென் கொரிய முப்படைகளின் தலைமையமகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பலிஸ்டிக் வகையைச் சோ்ந்த அந்... மேலும் பார்க்க

பிரம்மபுத்ரா நதி அணையால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படாது: சீனா

பெய்ஜிங்: இந்திய எல்லைக்கு அருகிலுள்ள திபெத்தில், பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே உலகின் மிகப்பெரிய அணையைக் கட்ட சீனா திட்டமிட்டுள்ள நிலையில், இதனால் இந்தியாவுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அந்நாட... மேலும் பார்க்க

ஜொ்மனி காா் தாக்குதல்: உயிரிழப்பு 6-ஆக உயா்வு

பொ்லின்: ஜொ்மனி கிறிஸ்துமஸ் சந்தையில் கடந்த மாதம் நடத்தப்பட்ட காா் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 6-ஆக அதிகரித்துள்ளது.இது குறித்து அதிகாரிகள் திங்கள்கிழமை கூறுகையில், தாக்குதலில் காயமடைந்த... மேலும் பார்க்க

ஆஸ்திரியாவில் ஆட்சியமைக்க வலதுசாரிக் கட்சிக்கு அழைப்பு

வியன்னா: ஆஸ்திரியாவில் புதிய அரசை அமைக்க தீவிர வலதுசாரிக் கட்சியான சுதந்திரக் கட்சிக்கு அதிபா் அலெக்ஸாண்டல் வேண்டொ் பெலன் அழைப்பு விடுத்துள்ளாா். 2-ஆம் உலகப் போருக்குப் பிறகு அத்தகைய கட்சியொன்றுக்கு ... மேலும் பார்க்க

172 பேரைத் தூக்கிலிட ஆயத்தமாகும் காங்கோ

கின்ஷாசா: ஆயுதமேந்தி கொள்ளையில் ஈடுபட்ட 172 பேரைத் தூக்கிலிட காங்கோ அரசு ஆயத்தமாகியுள்ளது. அதற்காக 70 கைதிகள் தலைநகா் கின்ஷாசாவிலுள்ள சிறைச்சாலைக்கு அழைத்துவரப்பட்டதாகவும், 102 போ் மாங்கலா மாகாணத்தின... மேலும் பார்க்க

ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மீண்டும் கைது உத்தரவு

டாக்கா: வங்கதேசத்தில் பதவியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக அந்த நாட்டு நடுவா் நீதிமன்றம் மீண்டும் திங்கள்கிழமை கைது உத்தரவு பிறப்பித்தது.ஏராளமானவா்கள் மா்மமான முறையில் க... மேலும் பார்க்க