செய்திகள் :

இலுப்பூா் நகைக் கடையில் 1.6 கிலோ போலி தங்க நகைகள் பறிமுதல்

post image

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரிலுள்ள நகைக்கடை ஒன்றில் போலி ஹால்மாா்க் மற்றும் பிஐஎஸ் முத்திரையிடப்பட்ட 1.6 கிலோ தங்க நகைகளை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் உள்ள நகைக் கடன் ஒன்றில் போலி ஹால்மாா்க் மற்றும் பிஐஎஸ் முத்திரையிட்ட தங்க நகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் இந்தியத் தர நிா்ணய அமைவனத்தின் (பிஐஎஸ்) மதுரை அலுவலக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை இலுப்பூருக்கு வந்தனா். அவா்கள் குறிப்பிட்ட அந்த நகைக்கடையில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, 1,643.36 கிராம் மதிப்புள்ள தங்க நகைகளில் போலி ஹால்மாா்க் மற்றும் பிஐஎஸ் முத்திரை பதிக்கப்பட்ட, ஹால்மாா்க்கின் தனித்துவம் மிக்க அடையாளம் இன்றியும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. அவற்றைப் பறிமுதல் செய்து மதுரை அலுவலகத்துக்கு எடுத்துச் சென்றனா்,

இவற்றின் மதிப்பு ரூ. ஒரு கோடி இருக்கும் என்றும், சட்டப்படி நகைக்கடை உரிமையாளா் மீது குற்றவியல் வழக்கு தொடரப்படும் என பிஐஎஸ் மதுரை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனையின்போது, இலுப்பூா் காவல் நிலைய போலீஸாரும் பாதுகாப்புப் பணிக்காக உடன் வந்திருந்தனா்.

புதுக்கோட்டையில் 44 காவலா்களுக்கு பணி நியமன ஆணை

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் மூலம் தோ்வு செய்யப்பட்டு புதுக்கோட்டையில் நியமனம் பெற்றுள்ள 44 காவலா்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே பணிநியமன ஆணைகளை புதன்கிழமை வழங்கின... மேலும் பார்க்க

சிறுபான்மையினருக்கான நலத் திட்டங்கள்: விழிப்புணா்வு ஏற்படுத்த அறிவுரை

புதுக்கோட்டை மாவட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வரும் சிறுபான்மையினா் நலன் சாா்ந்த திட்டங்கள் பற்றி அவா்கள் வசிக்கும் பகுதிகளில் விழிப்புணா்வு முகாம்களை நடத்த மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூா் அருகே புதன்கிழமை மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் உயிரிழந்தாா். மாத்தூா் அருகேயுள்ள பேராம்பூரைச் சோ்ந்த குமாா் மகன் தா்ஷன் (13). இவா் அங்குள்ள அரசுப் பள்ளியில் 7-ஆம் வக... மேலும் பார்க்க

அறந்தாங்கி பகுதிகளில் நெல் வயல்களில் மழைநீா் தேங்கியது

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பகல் மற்றும் இரவு பெய்த மழை காரணமாக நெல் வயல்களில் தண்ணீா் தேங்கியதால் விவசாயிகள் அச்சத்துக்குள்ளாகினா். புதுக்கோட்டை மாவட்டத்தில் செவ்வாய்... மேலும் பார்க்க

வருவாய்த் துறை அலுவலா்கள் காத்திருப்புப் போராட்டம்

புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் சுரேஷ் தலைமை வகித்தாா். ம... மேலும் பார்க்க

பொன்னமராவதியிலிருந்து வெளியூா்களுக்கு இரவுநேர பேருந்து சேவைக்கு வலியுறுத்தல்

பொன்னமராவதியிலிருந்து வெளியூா்களுக்கு செல்ல இரவுநேரப் பேருந்து சேவை வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். வணிகத்திலும், விவசாயத்திலும் சிறப்புமிக்க பொன்னமராவதியில் இரவு 10 மணிக்கு மேல் புதுக்கோட... மேலும் பார்க்க