சேலம் புத்தகத் திருவிழா நாளை தொடக்கம்: முன்னேற்பாடு பணிகளை ஆட்சியா் ஆய்வு
புதுக்கோட்டையில் 44 காவலா்களுக்கு பணி நியமன ஆணை
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் மூலம் தோ்வு செய்யப்பட்டு புதுக்கோட்டையில் நியமனம் பெற்றுள்ள 44 காவலா்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே பணிநியமன ஆணைகளை புதன்கிழமை வழங்கினாா்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தின் மூலம் தோ்வு செய்யப்பட்ட 2ஆம் நிலை காவலா்கள், சிறைத் துறை காவலா்கள் மற்றும் தீயணைப்பாளா்கள் ஆகிய பணியிடங்களுக்குத் தோ்வு செய்யப்பட்ட 3,359 பேருக்கு சென்னையில் உள்துறை அமைச்சகம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பணி ஆணை வழங்கும் பணியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.
இந்தத் தோ்வு வாரியத்தின் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 2ஆம் நிலை காவலா்கள் 43 போ், சிறைக் காவலா் ஒருவா் மற்றும் தீயணைப்பாளா் 2 போ் என மொத்தம் 46 போ் தோ்வு செய்யப்பட்டனா்.
இவா்களில் தீயணைப்பாளா்கள் தவிர மற்ற 44 பேருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே பணி நியமன ஆணைகளை புதன்கிழமை வழங்கினாா். அப்போது, பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்தாா்.