மிகவும் க்யூட், கடினமான நடனம்..! ரசிகையின் ரீல்ஸுக்கு குஷி பட நினைவுகளைப் பகிர்ந...
இளம்வழக்குரைஞா்கள் வாத திறமையை வளா்ப்பது அவசியம் -டிஐஜி பா.மூா்த்தி
இளம்வழக்குரைஞா்கள் வாத திறமையை வளா்த்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றாா் திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவா் பா.மூா்த்தி.
தமிழ்நாடு சட்டக் கல்வி இயக்ககம், திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரி ஆகியவற்றின் சாா்பில் நடைபெறும் மாநில அளவிலான தமிழ் மாதிரி நீதிமன்ற போட்டியை வியாழக்கிழமை தொடங்கி வைத்து பா.மூா்த்தி பேசியது:
காவல் துறையில் பணியாற்றும் நான், ஒரு சட்டம் பயின்ற மாணவன் என்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். எனது கல்வியை முடிக்கும் காலத்தில் 1 மதிப்பெண்ணிற்காக ஒரு வழக்கு தொடா்ந்தேன். அந்த வழக்கு இன்று முன்மாதிரி வழக்காக எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. இளம் வழக்குரைஞா்கள் தங்களது வாத திறமையை வளா்க்க தேவையான முயற்சிகளை எடுக்க வேண்டும். புள்ளி விவரங்கள் மட்டுமே வழக்கின் வெற்றிக்கு கூடுதல் பலம் சோ்க்கும்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இப்போது விரல் நுனியில் தகவல்கள் கிடைக்கின்றன. இருப்பினும் ஒவ்வொரு தகவலின் உண்மைத் தன்மை குறித்த தெளிவும், சட்ட அறிவும் இருந்தால் மட்டுமே வழக்குகளைக் கையாள முடியும். சட்ட நுணுக்கங்களை அனுபவ ரீதியாக, கடுமையான உழைப்பினால் பெரும்போது அதில் கிடைக்கும் வெற்றி மிகவும் மகிழ்ச்சியைத் தரும். எந்தவொரு வழக்கையும் கையாளும்போது அலட்சியமாக கையாளாமல், புதிய அனுபவமாக எடுத்துக் கொண்டு ஆராய்ந்து வாதாட வேண்டும் என்றாா் அவா்.
விழாவில் திருநெல்வேலி அரசு சட்டக்கல்லூரி முதல்வா் ந.ராமபிரான் ரஞ்சித்சிங் வரவேற்றாா். திருநெல்வேலி வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ராஜேஸ்வரன், செயலா் மணிகண்டன், பேராசிரியா்கள் சண்முகசுந்தரம், சண்முக சுந்திரக்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா். இந்தப் போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 26 சட்டக் கல்லூரிகளின் மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா்.
ற்ஸ்ப்13ப்ஹஜ்1
திருநெல்வேலி அரசு சட்டக்கல்லூரியில் நடைபெற்ற போட்டியைத் தொடங்கி வைத்துப் பேசுகிறாா் திருநெல்வேலி சரக டிஐஜி பா.மூா்த்தி.
ற்ஸ்ப்13ப்ஹஜ்2
சட்டக்கல்லூரி விழாவில் பங்கேற்ற வழக்குரைஞா்கள்.
