Aamir Khan: "நான் இப்படத்திற்கு கதை, பணம் என எதையும் கேட்கவில்லை, காரணம்" - ஆமீர...
இளைஞன் - வளர்ந்த மனிதன்... பத்தாண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிலிருந்து விலகும் தென்கொரிய வீரர்!
டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பா் அணியின் கேப்டன் சன் ஹியொங்-மின் இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தென்கொரியாவைச் சேர்ந்த சன் (33 வயது) தன்னுடைய 23ஆவது வயதில் வடக்கு லண்டனுக்கு குடிபெயர்ந்தார். பத்தாண்டுகள் பிரீமியர் லீக்கில் விளையாடியுள்ளார். இதில், 454 போட்டிகளில் 173 கோல்கள் அடித்துள்ளார்.
யூரோப்பா லீக் கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பா் அணி சமீபத்தில் கைப்பற்றியது. 40 ஆண்டுகளில் டாட்டன்ஹாம் அணி வென்ற முதல் ஐரோப்பிய கால்பந்து பட்டம் இதுவாகும்.
இதன் பயிற்சியாளர் விலகியதை தொடர்ந்து கேப்டனும் விலகுவதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது:
23 - 33: இளைஞன் - வளர்ந்த மனிதன்
போட்டிக்கு முன்பாக, நான் இந்த கோடைகாலத்துடன் இந்த கிளப்பை விட்டு விலகுகிறேன் என்ற தகவலை உங்களிடம் சொல்ல வேண்டும். என்னுடைய இந்த முடிவுக்கு அணியும் மதிப்பளித்துள்ளது.
23 வயதில் இளைஞனாக வடக்கு லண்டனுக்கு வந்தேன். ஆங்கிலம்கூட பேசத் தெரியாத இளைஞனாக வந்தான். தற்போது, இங்கிருந்து வளர்ந்த மனிதனாக கிளம்புவதில் பெருமைக் கொள்கிறேன்.
எனது வீடுபோல பார்த்துக்கொண்ட ஸ்பர் அணியின் ரசிகர்களுக்கு நன்றி. நான் எடுத்ததிலேயே இந்த முடிவு கடினமாக இருந்தது. ஆனால், இந்த குட் பை சரியான நேரத்தில் எடுத்ததாக நினைக்கிறேன். அடுத்து என்ன செய்யப்போகிறேன் என்பதற்கு என்னிடம் பதில் இல்லை என்றார்.
அமெரிக்காவில் எம்எல்எஸ் தொடர் அல்லது சௌதி கிளப்பில் விளையாடுவார் எனத் தெரிகிறது. இருப்பினும் அவருக்கு தென் கொரியாவுக்காக உலகக் கோப்பை விளையாட வேண்டும் என்பதுதான் கவனம் அதிகமாக இருக்கிறது.