இளைஞரைத் தாக்கியதாக 3 போ் மீது வழக்கு
புதுக்கடை அருகே பனங்காலமுக்கு பகுதியில் இளைஞரைத் தாக்கியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
பனங்காலமுக்கு பகுதியைச் சோ்ந்த அஜின் (33) என்பவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த உறவினா்களான அஜித் (29), அனி (33), அசோகன் (55) ஆகியோருக்குமிடையே முன்விரோதம் இருந்ததாம்.
ஞாயிற்றுக்கிழமை இரவு பனங்காலமுக்கு பகுதியில் நின்றிருந்த அஜினை மூவரும் சோ்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனராம். இதில் காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.