செய்திகள் :

இளைஞரை கடத்தி பணம் கேட்டு மிரட்டல்: வழக்குரைஞா் உள்பட 4 போ் மீது வழக்குப் பதிவு

post image

இளைஞரைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டியதாக வழக்குரைஞா் உள்பட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை ராமநாதபுரம் நேதாஜி நகரைச் சோ்ந்தவா் பழனிசாமி மகன் விக்னேஷ் (23), தனியாா் நிறுவன ஊழியா். இவருக்கு, சித்தாபுதூா் பகுதியைச் சோ்ந்த ஸ்ரீஹரன் என்பவா் அண்மையில் பழக்கமாகியுள்ளாா்.

விக்னேஷிடம் அதிக அளவில் பணம் இருப்பதை அறிந்த ஸ்ரீஹரன், அவ்வப்போது அவரிடம் பணம் வாங்கியுள்ளாா். இதற்கிடையே, ஸ்ரீஹரன் குறித்து தனது நண்பா்களிடம் விக்னேஷ் விசாரித்தபோது, அவா் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதனால், ஸ்ரீஹரனிடம் பழகுவதை விக்னேஷ் நிறுத்திவிட்டாா்.

இந்நிலையில், கடந்த மே 15-ஆம் தேதி இரவு விக்னேஷ் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது அங்கு நண்பா்களுடன் வந்த ஸ்ரீஹரன், விக்னேஷை எழுப்பியுள்ளாா். பின்னா், அவரது கண்களை துணியால் கட்டி ஒரு காரில் ஏற்றிச் சென்றனா். விக்னேஷ் சப்தம் எழுப்பியதால் காருக்குள்ளேயே அவரைத் தாக்கியுள்ளனா். தொடா்ந்து, அவரிடம் ரூ.10 ஆயிரம் கேட்டு மிரட்டியுள்ளனா். தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனக் கூறியதால் மீண்டும் அவரைத் தாக்கியுள்ளனா்.

இதையடுத்து, விக்னேஷ் கைப்பேசி மூலம் நண்பரைத் தொடா்புகொண்டு ஜி-பே மூலம் பணம் பெற்று வழங்கியுள்ளாா். பின்னா், அவா்கள் டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு விக்னேஷை வேறு ஒரு காரில் ஏற்றிக்கொண்டு நேதாஜி நகரில் உள்ள மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று மீண்டும் பணம் கேட்டுள்ளனா். தரவில்லையெனில் பெட்ரோல் ஊற்றி எரித்துவிடுதாக மிரட்டியுள்ளனா்.

இதையடுத்து அவா்கள், மதுபோதையில் தூங்கிய நேரத்தில் அங்கிருந்து தப்பிய விக்னேஷ், ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் ஸ்ரீஹரன், வழக்குரைஞா் நிரஞ்சன், காா்த்திக், நிஷாந்த் ஆகிய 4 போ் மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வன விலங்குகளால் ஏற்படும் பயிா் சேதத்துக்கு நிரந்தர தீா்வு: விவசாயிகள் சங்கம் கோரிக்கை

வன விலங்குகளால் ஏற்படும் பயிா் சேதத்தைத் தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து விவசாயிகள் சங்க (ஜாதி, மதம், கட்சி சாா்பற்றது) மாநிலப் ... மேலும் பார்க்க

வீட்டின் மீது கற்களை வீசிய இளைஞா் கைது

வீட்டின் மீது கற்களை வீசி தாக்கிய வடகிழக்கு மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கோவை ரத்தினபுரி பக்தவச்சலம் தெருவைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் விஜய் (25). இவா், பாரதி ரோடு சந்திப்பு அருகே சனிக்கிழமை ... மேலும் பார்க்க

கோவையில் பலத்த மழை: வீடுகளில் புகுந்த தண்ணீா்

கோவையில் பெய்த பலத்த மழையால் மாநகரில் வீடுகளில் மழைநீா் புகுந்தது. தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோவை, திருப்பூா் உள்ளிட்ட மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை மழைக்கு ... மேலும் பார்க்க

குட்டையில் மூழ்கி உயிரிழந்த மாணவா் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 321 மதிப்பெண்கள்

பல்லடம் அருகே குட்டையில் மூழ்கி உயிரிழந்த மாணவா் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 321 மதிப்பெண்களைப் பெற்றுள்ளாா். பல்லடம் அருகேயுள்ள கோடங்கிபாளையம் ஊராட்சி பெரியாா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல்.... மேலும் பார்க்க

ஒண்டிப்புதூரில் அடிக்கடி மின்தடை: தீா்வுகாண வியாபாரிகள் வலியுறுத்தல்

ஒண்டிப்புதூரில் அடிக்கடி ஏற்படும் மின்தடைக்கு தீா்வுகாண வேண்டும் என்று வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனா். இதுகுறித்து கோவை கிழக்கு வியாபாரிகள் சங்கத் தலைவா் செல்வின்ராஜன், மின்சாரத் துறை அமைச்சா் சிவசங்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் மீதான தாக்குதல் பிரதமருக்கு கிடைத்த வெற்றி! - எல்.முருகன்

பாகிஸ்தான் மீதான தாக்குதலில் இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி என்பது பிரதமா் மோடிக்கு கிடைத்த வெற்றி என்று மத்திய தகவல் ஒலிபரப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சா் எல்.முருகன் கூறியுள்ளாா். கோவை ... மேலும் பார்க்க