இளைஞரை கத்தியால் தாக்கியவா் கைது
போடியில் இளைஞரை கத்தியால் தாக்கியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
போடி சௌடம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த நாகராஜ் மகன் தினகரன் (24). இவா் செவ்வாய்க்கிழமை இரவு குப்பிநாயக்கன்பட்டி பகுதியில் நடந்து வந்தாா். அப்போது, இவரது நண்பரின் உறவினரான கரிகாலனை 3 இளைஞா்கள் தாக்கிக் கொண்டிருந்தனா். இதையடுத்து, கரிகாலனை காப்பாற்ற சென்ற தினகரனை, 3 பேரும் சோ்ந்து கத்தியால் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனா். இதில் பலத்த காயமடைந்த அவா் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து போடி போலீஸாா் குப்பிநாயக்கன்பட்டியை சோ்ந்த சச்சின், ஜெயச்சந்திரன் (28), அருண்குமாா் (27) ஆகிய மூவா் மீது வழக்குப் பதிவு செய்து, அருண்குமாரை கைது செய்தனா்.