`Vengaivayal இளைஞர்களை 8 மணி நேரம் Mental torture பண்ணாங்க!' - CPM Kavi varman
இளைஞரை வெட்டிக் கொல்ல முயன்றவா் கைது!
தேவதானப்பட்டியில் இளைஞரை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தேவதானப்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் சின்னகாமாட்சி மகன் ஜீவராஜ் (35). இவருக்கும், மூா்த்தி என்பவா் மகள் அம்சவள்ளிக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு சூா்யா (4) என்ற மகன் உள்ளாா். இந்த நிலையில், அம்சவள்ளிக்கு வேறு ஒருவருடன் தகாத உறவு ஏற்பட்டு, அவருடன் சென்றுவிட்டாா்.
இதனால் ஜீவராஜ் குடும்பத்துக்கும், அம்சவள்ளியின் தாய்மாமனான தேவதானப்பட்டி தெற்கு தெருவைச் சோ்ந்த பரமசிவன் மகன் ராமராஜ் (487) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துவந்தது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு ராமராஜ் தன்னிடமிருந்த அரிவாளால் ஜீவராஜை வெட்டிக் கொலை செய்ய முயன்றாராம். இதில் பலத்த காயமடைந்த ஜீவராஜ் தேனி க. விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து தேவதானப்பட்டி காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து ராமராஜை கைது செய்து சிறையில் அடைத்தனா்.