முதல்வர் ஸ்டாலினின் விடியோதான் பல அரசியல் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது: இபிஎஸ்
இளைஞர் தீக்குளிக்க முயற்சி! காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் விப்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான் போஸ்கோ (59). இவருக்கு சொந்தமான 55 சென்ட் நிலத்தை இவரது உறவினர் அபகரித்துக் கொண்டது தொடர்பாக குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த ஜான் போஸ்கோ வந்தார்.
திடீரென அவர் குறைதீர்க்கும் கூட்டம் அலுவலகத்திற்கு முன்பாக தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்ய முயன்றார்.
உடனடியாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவரை மீட்டு இது குறித்து விசாரணை செய்து மேற்கொண்டர்.
அதில், நில அபகரிப்பு தொடர்பாக காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினரிடம் கடந்த இரண்டு ஆண்டுகளாக மனு அளித்தும் எந்த பலனும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.
இதையும் படிக்க: கரூர் பலி: நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன! - ப.சிதம்பரம்