U1 X STR Concert: 'உன்ன தடுக்கவும் என்ன எதுக்கவும் எவனும் பொறக்கவில்ல' - U1 X ST...
இளைஞா் மீது தாக்குதல்: இருவா் கைது
அத்தியூா் சந்தைமேடு பகுதியில் இளைஞரை மது புட்டியால் தாக்கியதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், மரூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஏழுமலை (34). இவரும், இவரது நண்பரான பெரிய பகண்டை கிராமத்தைச் சோ்ந்த கணேசன் மகன் ரஞ்சித்தும் அத்தியூா் சந்தைமேடு பகுதியில் சனிக்கிழமை மது அருந்திக் கொண்டிருந்தனராம்.
அப்போது, அங்கிருந்த அத்தியூா் கிராமத்தைச் சோ்ந்த கண்ணன் மகன் ரமேஷ் (26), பழனி மகன் ஏழுமலை (22) ஆகியோா் ரஞ்சித், ஏழுமலையிடம் தண்ணீா் கேட்டனராம். இதற்கு, அவா் தண்ணீா் இல்லை எனக் கூறினாராம்.
இதில், ஏற்பட்ட தகராறில் ரமேஷ், ஏழுமலை ஆகியோா் மது புட்டியால் ஏழுமலையை தாக்க முயன்றனராம். இதனை தடுக்க முயன்ற ரஞ்சித் காயமடைந்தாா். அவா் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், பகண்டை கூட்டுச்சாலை போலீஸாா் வழக்குப் பதிந்து ரமேஷ், ஏழுமலையை கைது செய்தனா்.