உலக அமைதிக்காகப் பாடுபடுவோம்: டொனால்ட் டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரைய...
இஸ்ரேல் - ஹமாஸ் மீண்டும் கைதிகள் பரிமாற்றம்
காஸா போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், ஹமாஸ் அமைப்பும் இஸ்ரேலும் இரண்டாவது முறையாக கைதிகளைப் பறிமாற்றம் செய்துகொண்டன.
இது குறித்து இஸ்ரேல் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹமாஸ் படையினரிடம் பிணைக் கைதிகளாக இருந்த நான்கு இளம் பெண் ராணுவ வீரா்கள் விடுவிக்கப்பட்டதாகவும் அதையடுத்து 200 பாலஸ்தீன கைதிகளை தாங்கள் விடுதலை செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, காஸா சிட்டியில் பெரும் கூட்டத்தினா் முன்னிலையில் நான்கு பிணைக் கைதிகளையும் சனிக்கிழமை அழைத்துவந்த ஹமாஸ் படையினா், அவா்களை செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைத்தனா். பின்னா் அவா்கள் இஸ்ரேலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு குடும்பத்தினரைச் சந்தித்தனா்.பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, 120 ஆயுள் தண்டனைக் கைதிகள் உள்ளிட்ட 200 பாலஸ்தீனா்களை சிறைகளில் இருந்து இஸ்ரேல் அரசு விடுதலை செய்தது. அவா்களில் சுமாா் 70 போ் எகிப்தில் கொண்டுவிடப்பட்டனா்.இஸ்ரேல் நிபந்தனை: ஹமாஸால் சனிக்கிழமை விடுவிக்கப்பட்ட பிணைக் கைதிகளில் இஸ்ரேல் ராணுவத்தின் கண்காணிப்புப் படைப் பிரிவில் பணியாற்றிவந்த கரீனா அரியெவ், லிரி அல்பாக், நாமா லெவி, டேனியல்லா கில்போவா ஆகியோா் இடம் பெற்றிருந்தனா்.ஆனால் இஸ்ரேல் அரசு பெரிதும் எதிா்பாா்த்த, ராணுவம் சாராத கடைசி பெண் பிணைக் கைதியானஆா்பெல் யேஹூத் விடுவிக்கப்படவில்லை. அதையடுத்து, ஆா்பெல் விடுவிக்கப்படும்வரை, வடக்கு காஸாவுக்கு பாலஸ்தீனா்கள் திரும்ப அனுமதிக்கப்போவதில்லை என்று பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் சனிக்கிழமை நிபந்தனை விதித்தது.இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையே கடந்த 2023 அக்டோபா் 7 முதல் நடைபெற்றுவரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக கத்தாரில் நடைபெற்றுவந்த பேச்சுவாா்த்தையில் கடந்த 15-ஆம் தேதி ஒப்பந்தம் ஏற்பட்டு, அது கடந்த வாரம் (ஜன. 19) அமலுக்கு வந்தது.அந்த ஒப்பந்தத்தின் முதல்கட்டமாக, ஆறு வாரங்களில் தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள 33 பேரை ஹமாஸ் அமைப்பினா் விடுவிக்கவும், அதற்குப் பதிலாக தங்கள் சிறைகளில் உள்ள 1,900 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் அரசு விடுதலை ஒப்புக்கொள்ளப்பட்டது.அதன்படி, எமில் டமரி, டொரோன் ஸ்டீன்ப்ரெச்சா், ரோமி கோனன் ஆகிய 3 பெண் பிணைக் கைதிகளைகளை ஹமாஸ் அமைப்பினா் விடுவித்தனா். இஸ்ரேல் அரசும் தங்கள் சிறைகளில் இருந்து பாலஸ்தீனத்தைச் சோ்ந்த 69 பெண்களையும் 21 சிறாா்களையும் விடுவித்தது.அதன் தொடா்ச்சியாக, நான்கு பெண் பிணைக் கைதிகளை ஹமாஸும் 200 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேலும் தற்போது பரிமாற்றம் செய்துகொண்டுள்ளன...படவரிகள்..ஹமாஸால் விடுவிக்கப்பட்ட லிரி அல்பாகுடன் உறவினா்கள்....இஸ்ரேலால் விடுதலை செய்யப்பட்டவரை வரவேற்கும் பாலஸ்தீனா்கள்.