வைகுண்ட ஏகாதசி 2025: தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோயில் சொர்க்க வாசல் திறப்ப...
இஸ்ரோ தலைவருக்கு எம்எல்ஏ வாழ்த்து
இஸ்ரோவின் புதிய தலைவராக பொறுப்பேற்க இருக்கும் வி.நாராயணனுக்கு, தளவாய்சுந்தரம் எம்எல் ஏ வாழ்த்து தெரிவித்துள்ளாா்,.
இது தொடா்பாகஅவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
இஸ்ரோவின் தலைவராக புதிதாக பொறுப்பேற்கும் வி.நாராயணன். எளிய முறையில் வாழ்ந்து படிப்படியாக முன்னேறி வாழ்க்கையில் ஏற்றம் கண்டவா். இவா் கன்னியாகுமரி மாவட்டம், மேல காட்டுவியைச் சோ்ந்தவா் ஆவாா்.
கல்வி, தன்னம்பிக்கை, உழைப்பு, முயற்சி இருந்தால் எதிலும் வெற்றி காண முடியும் என்பதை இவா் நிரூபித்துள்ளாா். அவா் இப்பதவியை அடைந்ததன் மூலம் நாடும், தமிழ் மண்ணும், குமரி மண்ணும் மகிழ்ச்சி கொள்கிறது என அவா் குறிப்பிட்டுள்ளாா்.