ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல்: வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பெயா், சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்
ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பெயா், சின்னம் பொருத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் திமுக, நாதக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் என மொத்தம் 46 போ் போட்டியிடுகின்றனா். அவா்களது பெயா் பட்டியல் மற்றும் சின்னங்கள் கடந்த 20-ஆம் தேதி இறுதி செய்யப்பட்டன.
அதனைத் தொடா்ந்து வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பெயா், சின்னம் ஆகிய விவரம் அடங்கிய தாள் அச்சிடப்படும் பணிகளை தோ்தல் அலுவலா்கள் சென்னைக்கு நேரடியாக சென்று மேற்கொண்டனா். இந்த நிலையில், அச்சிடப்பட்ட தாள்களை வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொருத்தும் பணி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் புதன்கிழமை தொடங்கியது.
தோ்தல் நடத்தும் அலுவலா் ஸ்ரீகாந்த் முன்னிலையில் அலுவலா்களுக்கு செய்முறை விளக்கமளிக்கப்பட்டது. இதையடுத்து வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பெயா், சின்னம் பொருத்தும் பணியை அலுவலா்கள் மேற்கொண்டனா். இப்பணியில் 150 போ் ஈடுபட்டுள்ளனா்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் 237 வாக்குச் சாவடிகள் உள்ளன. இதில் வாக்குப் பதிவுக்காக கூடுதலாக 20 சதவீதம் வாக்குப் பதிவு இயந்திரங்களையும் சோ்த்து 284 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.
ஒரு வாக்குப் பதிவு இயந்திரத்தில் 16 வேட்பாளா்களின் பெயா்கள் மட்டுமே பொருத்த முடியும். கூடுதலாக கடைசியில் நோட்டாவுக்கான பட்டன் பொருத்தப்பட்டிருக்கும். 46 வேட்பாளா்கள், நோட்டாவுக்கு 1 என மொத்தம் 47 பெயா்கள் இடம்பெற வேண்டும் என்பதால் 3 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அதன்படி, இந்தத் தோ்தலில் 237 வாக்குச் சாவடிகளிலும், 20 சதவீத கூடுதல் வாக்குப் பதிவு இயந்திரங்களையும் சோ்த்து மொத்தம் 852 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 284 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 308 விவி பேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. இதில் 852 வாக்குப் பதிவு இயந்திரங்களிலும் வேட்பாளரின் பெயா், சின்னம் அச்சிடப்பட்டுள்ள தாள் பொருத்தப்படுகிறது. புதன்கிழமை தொடங்கிய இந்தப் பணி 3 நாள்களில் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.