ஈவிகேஎஸ். இளங்கோவன் படத்துக்கு அஞ்சலி
மறைந்த காங்கிரஸ் தலைவா் ஈவிகேஎஸ். இளங்கோவன் படத்துக்கு புதுக்கோட்டையில் அனைத்துக் கட்சியினரும் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலிசெலுத்தினா்.
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் வி. முருகேசன் தலைமை வகித்தாா்.
திமுகவைச் சோ்ந்த புதுக்கோட்டை எம்எல்ஏ வை. முத்துராஜா, காங்கிரஸ் மாநிலப் பொதுச் செயலா் பெனட் அந்தோனிராஜ், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் வழக்குரைஞா்சந்திரசேகரன், சிறுபான்மையினா் பிரிவு மாநிலத் துணைத் தலைவா் இப்ராஹிம் பாபு, வட்டார காங்கிரஸ் தலைவா் சூா்யா பழனியப்பன், மாமன்ற உறுப்பினா்கள் சுப சரவணன் (திமுக), ராஜா முகம்மது (காங்.), மதிமுக மாவட்டச் செயலா் கலியமூா்த்தி, நகரச் செயலா் கிருஷ்ணமூா்த்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருமறவன், ஷாஜஹான், மனிதநேய மக்கள் கட்சியின் அப்துல்கனி, எஸ்டிபிஐ சலாவுதீன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். சங்கா், மக்கள் நீதி மய்யம் சாா்பில் செந்தில்குமாா், நாம் தமிழா் கட்சியின் சாா்பில் பொன்வாசிநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.